முகப்பு »  நலவாழ்வு »  நீங்கள் சாப்பிடும் மீனில் பார்மலின் கலந்திருக்கிறதா?

நீங்கள் சாப்பிடும் மீனில் பார்மலின் கலந்திருக்கிறதா?

மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சாப்பிடும் மீனில் பார்மலின் கலந்திருக்கிறதா?

சிறப்பம்சங்கள்

  1. மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் வேதிப்பொருள் தடவப்படுகிறது.
  2. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீன் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
  3. கார்சினினோஜெனிக் என்கிற அமிலம் உடல்நிலையை பாதிக்கிறது

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பார்மலின் என்கிற வேதிப்பொருள் கெட்டுப்போகாமல் இருப்பதைத் தடுக்க உதவுகிறது. பிணவறைகளில் பிணங்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

nk84ff1

இவற்றை மனிதர்கள் உட்கொள்வதால், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும். நாளாக நாளாக, கிட்னி, கணையம், தோல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆஸ்துமா நோயாளிகள் இதனை உட்கொள்வதால் மூச்சுத்திணறல் ஏற்படும்.


k6k4ftq8

பார்மால்டிகைட் என்கிற வேதிப்பொருளில் இருந்து பார்மலின் தயாரிக்கப்படுகிறது. இருமல், கண் எரிச்சல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். அதிகமாக பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.

மீன் எளிதில் கெட்டுப் போகும் உணவு என்பதால், அதை 5 டிகிரி செல்சியஸில் பதப்படுத்தும் போது, பார்மலின் பயன்படுத்தப்படுகிறது. அதோடு அமோனியாவும் பயன்படுத்தப்படுகிறது.

வெகு தூரத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் பார்மலின் தடவுவதால் அவற்றை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும்.

பார்மலின் தடவாத மீன்களை வாங்குவது எப்படி?

உங்கள் பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் மீன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சிறிய மீன் விற்பனையாளர்களிடம் மீன்களை வாங்க வேண்டும்.

2. மீன்களின் செதில்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தால் அவை புதிய மீன்கள், அதுவே கருத்து காணப்பட்டால் அவை நாள்பட்ட மீன்கள் என்றும் அறிய வேண்டும். 

3. அதுபோல புதிய மீன்களில் பச்சை வாசனை இருக்காது. பழைய மீன்களில் அழுக்கிப் போன வாசனை இருக்கும்.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------