முகப்பு »  நலவாழ்வு »  தொண்டை கரகரப்பை உடனடியாக போக்க இவற்றை முயற்சிக்கலாம்!!

தொண்டை கரகரப்பை உடனடியாக போக்க இவற்றை முயற்சிக்கலாம்!!

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை அப்படி குடித்து வரலாம்.  இதனால் தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.  

தொண்டை கரகரப்பை உடனடியாக போக்க இவற்றை முயற்சிக்கலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. தொண்டை கரகரப்பை போக்க அதிமதுரம் சாப்பிடலாம்.
  2. எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
  3. பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து டீ தயாரித்து குடிக்கலாம்.

பருவகால மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.  மழைக்காலத்தில் வைரஸ் கிருமிகளால் இருமல் மற்றும் காய்ச்சல் உண்டாவது சகஜம்தான்.  இதனை சரிசெய்ய ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே குணப்படுத்தலாம்.  குறிப்பாக தொண்டை கரகரப்பை போக்க சில எளிய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  

கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சை மற்றும் பட்டை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி ஆகியவை குணமாகும்.  இந்த எளிய குறிப்புடன் மேலும் சில ஆரோக்கிய குறிப்புகளை தெரிந்து கொள்வோமா!!


A sore throat and cold fix - cardamom , clove , burnt lemon , fresh lemon , cinnamon steeped in hot water #thenewreligionlifestyle #themagicweightlosspill #healthcare

A post shared by Luke Coutinho (@luke_coutinho) on

உப்பு தண்ணீர்: 
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.  அதனை நாள் ஒன்றிற்கு 6-7 முறை கொப்பளித்து வந்தால் தொண்டையில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் கரகரப்பு குறையும்.  

தேன்: 
தொண்டையில் வலி ஏற்பட்டால் வெந்நீரில் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வரலாம்.  தொண்டை கரகரப்பை அகற்றி நிவாரணம் அளிக்கும். 

அதிமதுரம்: 
பண்டைக்காலம் முதலே அதிமதுரத்தை சளி, இருமல் பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஆகியவற்றை சரிசெய்ய அதிமதுரத்தில் டீ தயாரித்து குடிக்கலாம்.  அல்லது அதிமதுரம் சேர்த்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வரலாம்.  

எலுமிச்சை தண்ணீர்: 
எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.  உடல் எடை குறைக்கவும் வெந்நீரில் எலுமிச்சை சேர்த்து குடித்து வரலாம்.  நீங்கள் விருப்பப்பட்டால் அதில் தேன் அல்லது உப்பு சேர்த்து கொள்ளலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
ad79efi8

 தேங்காய் எண்ணெய்: 
தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.  சூப் அல்லது தேநீருடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து குடிக்கலாம்.  அல்லது ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை அப்படி குடித்து வரலாம்.  இதனால் தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------