முகப்பு »  நலவாழ்வு »  கூந்தல் வளர்ச்சியை தூண்டும் சில உணவுகள்!!

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் சில உணவுகள்!!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  அதுபோக நிறைய தண்ணீர் குடிக்கலாம்.    

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் சில உணவுகள்!!

சிறப்பம்சங்கள்

  1. சரியான உணவுகளை சாப்பிடுவதால் முடி உதிர்வு ஏற்படாது.
  2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் முடி உதிர்வு ஏற்படும்.
  3. இரும்புச்சத்து, பையோடின், புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் முடி உதிர்வை தடுக்க முடியவில்லையா?  கூந்தல் பராமரிப்பிற்கு தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.  வெளிப்பிரயோகம் செய்யக்கூடியவற்றை மட்டும் செய்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் விட்டால் நிச்சயம் கூந்தல் உதிர்வு ஏற்படும்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பொருத்துதான் நம் உடல் ஆரோக்கியம் அமையும்.  உடல் எடை குறைப்பதற்கும் செரிமான பிரச்னைகளையும் சரிசெய்ய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.  கூந்தலை அடர்த்தியாக வளர வைக்க சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பார்ப்போம்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சம அளவு சாப்பிடலாம்.    

பையோடின்: 

முட்டை, கடலை, பாதாம், வீட் ப்ரான், மீன், அவகாடோ, லோ-ஃபேட் சீஸ் போன்ற உணவுகளில் பையோடின் நிறைந்திருப்பதால் கூந்தல் வளர்ச்சியை தூண்ட இவற்றை சாப்பிடலாம். 


சிங்க்: 

விதைகள் மற்றும் கொட்டைகள், பீனட் பட்டர், வீட் ஜெர்ம், ஃபேட் ஃப்ரீ யோகர்ட் மற்றும் சீஸ் ஆகியவற்றில் சிங்க் இருப்பதால் கூந்தலை உறுதியாக வளர செய்யும்.  

பீட்டா-கெரட்டின்: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், கேல், பட்டர்நட் ஸ்வாஷ், லீட்யூஸ், அஸ்பராகஸ், பூசணிக்காய் போன்ற அடர் நிற காய்கறிகளில் பீட்டா கெரட்டின் இருக்கிறது.  

வைட்டமின் சி: 

சிவப்பு, மஞ்சள், பச்சை நிற குடைமிளகாயில் வைட்டமின் சி இருக்கிறது.  இது கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.  

cigru4bg

 

இரும்புச்சத்து:

டோஃபு, சோயாபீன்ஸ், ஸ்டார்சி பீன்ஸ், பட்டாணி, பருப்புகள் போன்றவற்றை இரும்புச்சத்துடன் புரதமும் இருக்கிறது.  

கீரைகள்: 

கீரைகளில் ஃபோலேட் இருப்பதால் கூந்தல் அடர்த்தியாக வளர உதவும். 

பீன்ஸ், ஓட்மீல், முட்டை, பீனட் பட்டர், பால் மற்றும் பால் பொருட்கள், முழுதானியங்கள், மீன் போன்றவற்றில் வைட்டமின் பி சத்து நிறைந்திருக்கிறது.  

e0ijgjfg

 

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  அதுபோக நிறைய தண்ணீர் குடிக்கலாம்.  மேற்கூறிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, அடர்த்தியாக வளரும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------