முகப்பு »  நலவாழ்வு »  கட்டுக்கோப்பான உடலுக்கு புரோட்டீன் பவுடர் சாப்பிடலாமா?- வல்லுநர்கள் சொல்வதைக் கேளுங்க

கட்டுக்கோப்பான உடலுக்கு புரோட்டீன் பவுடர் சாப்பிடலாமா?- வல்லுநர்கள் சொல்வதைக் கேளுங்க

புரோட்டீன் பானங்கள் உட்கொள்ளலாமா என்பது பற்றி நிபுணர்களின் கருத்துக்களை இங்குப் பார்க்கலாம்.

கட்டுக்கோப்பான உடலுக்கு புரோட்டீன் பவுடர் சாப்பிடலாமா?- வல்லுநர்கள் சொல்வதைக் கேளுங்க

பவுடர்கள், ஊட்டச்சத்து பானங்களை எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் வலம் வருகின்றன.

சிறப்பம்சங்கள்

  1. அதீத உடற்பயிற்சியில் ஈடுபடுவர்கள் புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வார்கள்
  2. புரதச் சத்து நிறைந்த உணவுகள் பசியைக் குறைக்கும்
  3. எடைக் குறைப்பிற்கும் அவை உதவும்

ஆரோக்கியமான உணவின் முக்கியமானதாக புரதம் நிறைந்த உணவுகள் உள்ளன. நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்து, எடை தூக்கி கடுமையான பயிற்சி செய்கிறவராக இருந்தால், புரதம் நிறைந்த உணவுகள் அதிகம் தேவைப்படும். அவை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.  நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உடலின் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைப்பதற்கு புரோட்டீன் உதவுகிறது.

சிக்ஸ் பேக் வைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள், வெயிட் தூக்கி உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் புரோட்டீன் பானங்கள், புரோட்டீன் பவுடர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இதுபோன்ற பவுடர்கள், ஊட்டச்சத்து பானங்களை எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் வலம் வருகின்றன. அந்த வகையில், புரோட்டீன் பானங்கள் உட்கொள்ளலாமா என்பது பற்றி நிபுணர்களின் கருத்துக்களை இங்குப் பார்க்கலாம்.

பிரபல உடற்பயிற்சி ஆசிரியர் கயலா இட்சைன்ஸ் கூறுகையில், 'இயற்கையில் எல்லாவிதமான சத்துக்களும் உணவுகளில் கிடைக்கிறது. எனவே ஆரோக்கியமான சீரான உணவை உட்கொண்டாலே, நமக்குத் தேவையான புரோட்டீன் சத்துக்களைப் பெற முடியும். தனியாக புரோட்டீன் பவுடர்களைப் எடுக்கத் தேவையில்லை' என்கிறார்.


o6v9m7mg


ஒரு முட்டையில் சுமார் 6-7 கிராம் அளவுக்கு புரோட்டீன் சத்து உள்ளது
Photo Credit: iStock

இதைப் போன்று லூக் கோடின்ஹோ என்ற பயிற்சியாளர் அன்றாட உணவில் புரோட்டீன் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். உதாரணத்திற்கு தினசரி மதிய உணவில் ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்கிறார். முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகப்படியான புரோட்டீன் சத்து உள்ளது.

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜூதா திவேகர் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், 'ஒவ்வொருவருக்கும் சில வகையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கலாம். அப்படியான சூழலில், ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் வகையில்,  கூடுதலாக புரோட்டீன் பானங்கள், புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்வது அவசியம். தற்போதைய சூழலில் நம் வாழ்க்கை முறை மோசமாகிவிட்டது. அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, சீரான உணவுமுறையைப் பின்பற்றினாலும், கூடுதலாக இதுபோன்ற சத்துப்பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம்' என்கிறார்.

(Rujuta Diwekar is a nutritionist based in Mumbai)


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

(Luke Coutinho, Holistic Lifestyle Coach - Integrative Medicine)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------