முகப்பு »  நலவாழ்வு »  பற்களை பிடுங்கிய பின் இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது!!

பற்களை பிடுங்கிய பின் இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது!!

ஞானப்பற்களை நீக்கியபின் இந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

பற்களை பிடுங்கிய பின் இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது!!

சிறப்பம்சங்கள்

 1. ஞானப்பற்களை அகற்றுவது சற்றே வலி மிகுந்தது.
 2. எளிமையான உணவுகளையே சாப்பிட வேண்டும்.
 3. மசாலா நிறைந்த மற்றும் மொருமொருப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

நம் எல்லோருக்கும் கடைவாய் பகுதியில் ஞாமப்பற்கள் முளைத்திருக்கும்.  ஆனால் அவற்றின் வளர்ச்சி சரியாக இருக்காது.  இதன் காரணமாக அவற்றில் பாக்டீரியா எளிதில் குடி புகுந்துவிடும்.  நாளடைவில் இவை பல் வலி, வீக்கம், சொத்தை போன்ற பல் பிரச்சனைகளை உருவாக்கும்.  அதனால் பெரும்பாலான பல் மருத்துவர்கள் இந்த பற்களை நீக்கிவிடுமாறு பரிந்துரைக்கிறார்கள்.  இந்த ஞான பற்களை நீக்குவதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகும்.  இந்த பற்களை நீக்கியபின் அந்த வலி குணமாவதற்கு சில நாட்கள் ஆகலாம்.  ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து அது மாறுபடும்.  அதுவரை எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

 1. மில்க்‌ஷேக், ஸ்மூத்தீஸ், விதைகள் நீக்கப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றில் சர்க்கரை மிகவும் குறைவாக சேர்த்து குடிக்கலாம்.  சிறு விதைகள் இருக்கக்கூடிய பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். 
 2. சூப், காய்கறிகள் வேகவைத்த நீர் ஆகியவற்றை குடிக்கலாம்.  இதில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது. 
 3. வாழைப்பழத்தை நன்கு மசித்து சாப்பிடலாம்.
 4. பீன்ஸை நன்கு வேகவைத்து மசித்து சாப்பிடலாம்.
 5. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை வேகவைத்து, மசித்து சாப்பிடலாம்.
 6. கேரட், ப்ரோக்கோலி ஆகியவற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.  அவற்றையும் வேகவைத்து மசித்து சாப்பிடலாம்.
 7. உங்கள் உடலுக்கு தேவையான புரதம் முட்டையில் உள்ளது.  முட்டையை பொரியல் போல செய்து சாப்பிடலாம்.
 8. க்ரீம் சீஸ், காட்டேஜ் சீஸ் அல்லது பன்னீர் ஆகியவற்றிலும் புரதம் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய கொழுப்பு சத்து உள்ளதால் இவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.
 9. தயிர் அல்லது ஃப்ரூட் யோகர்ட் சாப்பிடலாம்.  குடல் மற்றும் வயிற்று பகுதிக்கு மிகவும் நல்லது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com