முகப்பு »  நலவாழ்வு »  கலோரிகளை எரிக்க இவற்றை குடிக்கலாம்!!!

கலோரிகளை எரிக்க இவற்றை குடிக்கலாம்!!!

நீங்கள் தினசரி குடிக்கும் நீரில் வெள்ளரி, புதினா, எலுமிச்சை, பெர்ரீஸ், ஆரஞ்சு, இஞ்சி அல்லது உங்களுக்கு பிடித்த பழங்களை சேர்த்து குடிக்கலாம்.  இந்த நீரை நாள் முழுக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் எடை குறையும்.   

கலோரிகளை எரிக்க இவற்றை குடிக்கலாம்!!!

சிறப்பம்சங்கள்

  1. சில பானங்கள் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.
  2. அடிக்கடி இஞ்சி தேநீர் குடிப்பதால் உடல் எடை குறையும்.
  3. காலை எழுந்தவுடன் ஆப்பிள் சிடர் வினிகர் குடிக்கலாம்.

உடல் எடை குறைப்பு என்பது, நாம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களை காட்டிலும் அதிகபடியாக கலோரிகளை குறைப்பதேயாகும்.  கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சி செய்யலாம்.  அதேசமயம் கலோரிகளையும் கொழுப்புகளையும் கரைக்கக்கூடிய பானங்களை குடிக்கலாம்.  சில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைக்க செய்யும்.  அப்படிப்பட்ட சில பானங்களை பார்ப்போம்.  

ஆப்பிள் சிடர் வினிகர்: 
உடல் எடை குறைக்க ஆப்பிள் சிடர் வினிகர் மிகவும் முக்கியமானது.  நம்மில் பெரும்பாலானோர் உடல் எடை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சிடர் வினிகர் குடித்து வருகின்றனர்.  இது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை கரைக்கிறது.  

ப்ரோட்டீன் ட்ரிங்க்ஸ்: 
புரதம் நிறைந்த பானங்களை குடிப்பதால் உடல் எடை குறையும்.  புரதம் உங்கள் தசைகளை வலுவாக்கும்.  பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை கரைக்கவும் பயன்படுகிறது.  உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் ப்ரோட்டீன் ட்ரிங்க்ஸை குடிக்கலாம்.  


358l35

க்ரீன் டீ: 
க்ரீன் டீயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு.  இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதுடன், மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது.  உடல் எடை குறைக்க தொடர்ச்சியாக க்ரீன் டீயை குடித்து வரலாம்.  மேலும் இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.  

இஞ்சி தண்ணீர்: 
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை போக்க இஞ்சி தண்ணீர் குடிக்கலாம்.  உடல் எடையை குறைக்க இஞ்சி சேர்த்து நீர் அல்லது தேநீர் குடிக்கலாம்.  இது உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதுடன் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.  
 

lr3rnedடீடாக்ஸ் பானம்: 
நீங்கள் தினசரி குடிக்கும் நீரில் வெள்ளரி, புதினா, எலுமிச்சை, பெர்ரீஸ், ஆரஞ்சு, இஞ்சி அல்லது உங்களுக்கு பிடித்த பழங்களை சேர்த்து குடிக்கலாம்.  இந்த நீரை நாள் முழுக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் எடை குறையும்.   
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------