முகப்பு »  நலவாழ்வு »  ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்!!!!

ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்!!!!

மூட்டைப்பூச்சி கடி, ஒவ்வாமை, வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளை சரி செய்ய வாழைப்பழத் தோலை சருமத்தில் தேய்த்து வரலாம்.  

ஆரோக்கியம் மற்றும் அழகு பயன்கள் கொண்ட வாழைப்பழ தோல்!!!!

சிறப்பம்சங்கள்

  1. சரும பிரச்னைகளை போக்க வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.
  2. தலைவலியை தற்காலிகமாக போக்கும் தன்மை கொண்டது.
  3. கண்களுக்கு கீழுள்ள வீக்கத்தை போக்க வல்லது.

எல்லா பருவக்காலத்திலும் எளிமையாக கிடைக்கக்கூடிய பழங்களுள் வாழைப்பழமும் ஒன்று.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  செரிமானத்திற்கும், இருதய ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் மிகவும் நல்லது.  வாழைப்பழ தோலிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்ட உடனே அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல் அழகு பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.  

சருமம்: 
சரும பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். சுருக்கம், வறட்சி, வீக்கம், பருக்கள் போன்றவற்றை சரிசெய்துவிடும்.  வாழைப்பழ தோலை முகத்தில் தடவி வரலாம்.  கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை போக்க வாழைப்பழ தோலை வெட்டி கண்களுக்கு கீழ் வைக்கலாம்.  
 

9a4uqh48

பற்கள்: 
பற்களை பளிச்சென்று ஜொலிக்க வைக்க வாழைப்பழத் தோலை பற்களில் தேய்த்து வரலாம்.  தினமும் வாழைப்பழத் தோலை பற்களில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  ஒருவாரம் தொடர்ச்சியாக செய்து வரலாம்.  

தலைவலி: 
நமக்கு எப்போது வேண்டுமானாலும் தலைவலி ஏற்படலாம்.  வாழைப்பழத் தோலை வெட்டி ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து தலைவலி இருக்கும்போது நெற்றியில் வைக்கலாம்.  தற்காலிகமாக நிவாரணம் அளிக்கும் தன்மை கொண்டது.  
 

9a5e4c28

முதலுதவி: 
வாழைப்பழத் தோலில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.  மூட்டைப்பூச்சி கடி, ஒவ்வாமை, வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளை சரி செய்ய வாழைப்பழத் தோலை சருமத்தில் தேய்த்து வரலாம்.  

மேலும் சில்வர் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.  தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தலாம்.  இதனால் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.  காயம் மற்றும் சருமம் சிவந்திருந்தால் அங்கு வாழைப்பழத் தோலை தேய்த்து வரலாம்.  ஷூ பாலிஷிற்கு பதிலாக பழத்தோலை தேய்த்தால் பளிச்சிடும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------