முகப்பு »  நலவாழ்வு »  நெஞ்செரிச்சலை சரிசெய்ய தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!!!

நெஞ்செரிச்சலை சரிசெய்ய தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!!!

மது அருந்துவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  ஒயின் மற்றும் பீர் குடிப்பதால் வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும். 

நெஞ்செரிச்சலை சரிசெய்ய தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!!!

சிறப்பம்சங்கள்

  1. ஆரோக்கியமற்ற உணவுகள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.
  2. உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
  3. மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

நம்மில் பலருக்கும் நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கக்கூடும்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நம் வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்துவிடும்.  அந்த அமிலம் வயிற்றிலிருந்து அப்படியே ஈசோபேகஸ் வழியே வரும்போதுதான் நெஞ்செரிச்சல் உண்டாகிறது.  நெஞ்செரிச்சலை தவிர்க்க சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.  குறிப்பாக சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.  வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்க செய்யும் உணவுகள் என்னவென்று பார்ப்போம்.  

சிட்ரஸ்: 

சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து கொள்ளாமல் இருப்பது நல்லது. 


சாக்லேட்: 

சாக்லேட் தவிர்க்க முடியாத உணவுகளுள் ஒன்றாகிவிட்டது.  சாக்லேட் சாப்பிடுவதால் வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும்.  இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்ப்பது அவசியம்.   

மசாலா பொருட்கள்:

மசாலா பொருட்கள் குறைவான உணவை உட்கொள்வது நல்லது.  மசாலா பொருட்களில் கேப்சைசின் என்னும் தன்மை இருப்பதால் செரிமானத்தை தாமதப்படுத்துகிறது.  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை உருவாக்குவதால் இதனை தவிர்க்கலாம்.

கொழுப்பு: 

கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.  மேலும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும் என்பதால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் வயிற்றில் அமிலம் சுரப்பதையும் தடுக்க முடிகிறது. 

மது: 

மது அருந்துவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  ஒயின் மற்றும் பீர் குடிப்பதால் வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும்.  மேலும் மது அருந்துவதால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும்.  

8tidgpo

நெஞ்செரிச்சலை தவிர்க்க மேலும் சில வழிகள்: 

* அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டு கொண்டே இருப்பதை தவிர்க்கவும். 

* எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். 

* சாப்பிட்ட பின் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தலாம். 

* தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிடுவது நல்லது.

* ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

* புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். 

* நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கம் இருக்குமானால் மன அழுத்தம் குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------