முகப்பு »  நலவாழ்வு »  சாக்குலேட் பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!

சாக்குலேட் பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!

சாக்குலேட் மில்க் ஷேக் உடலுக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

சாக்குலேட் பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!

பொதுவாக, உடற் பயிற்சிகளுக்கு பிறகு பழ ஜூஸ், புரதச்சத்து நிறைந்த பானங்கள் எடுத்து கொள்வது வழக்கம். ஆனால், பெரும்பாலும் அனைவரும் விரும்ப கூடிய சாக்குலேட் மில்க் ஷேக் உடலுக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த அளவு கொழுப்புகளே ஒரு கப் சாக்குலேட் மில்க் ஷேக்கில் உள்ளன. மேலும், ஒரு கப் சாக்குலேட் மில்க் ஷேக் 8 கிராம் புரதச்சத்து கொண்டுள்ளது. அதனால், உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6u18r08o

பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சாக்குலேட் மில்க் ஷேக்கை பருகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உடல் எலும்புகளுக்கு வலிமை அளிக்கும் வைட்டமின் டி, பாஸ்பரஸ் சத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

poe8dn9

சரியான அளவு கார்போ ஹைட்ரேட்ஸ், புரதச்சத்து உள்ளதால், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைக்க சாக்குலேட் மில்க் ஷேக் உதவுகிறது. இனி, சாக்குலேட் பிரியர்கள் கவலை கொள்ள தேவையில்லை. உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு கப் சாக்குலேட் மில்க் ஷேக் குடித்து பூஸ்ட் அப் ஆகலாம்!

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------