முகப்பு »  நலவாழ்வு »  மார்பகம் திடீரென வளர்ச்சியடைவதற்கு 7 காரணங்கள்!

மார்பகம் திடீரென வளர்ச்சியடைவதற்கு 7 காரணங்கள்!

பெண்களுக்கு மார்பகம் திடீரென வளர்ச்சியடைய ஏழு காரணங்கள் உள்ளன.

மார்பகம் திடீரென வளர்ச்சியடைவதற்கு 7 காரணங்கள்!

உடல் எடை கூடும் போது மார்பளவும் பெரிதாகிறது

சிறப்பம்சங்கள்

  1. உடல் எடை அதிகரிப்பு பொதுவான காரணமாகும்
  2. உடற்பயிற்சி இல்லையென்றாலும் மார்பகம் பெரிதாகும்
  3. திடீரென மார்பகம் பெரிதானால் கவனிக்கப்படவேண்டும்

பெண்களுக்கு மார்பளவு பெரிதாவது என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால், திடீரென மார்பு வளர்ச்சியடைந்தால், அது எதனால் ஏற்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். பொதுவாக மார்பளவு பெரிதாவதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு என்கிறார்கள். மார்பகம் கொழுப்பு செல்களால் ஆனதால், உடல் எடை கூடும் போது மார்பளவும் கூடுகிறது.  இருப்பினும் திடீர் மார்பு வளர்ச்சி ஏற்படுவதற்கான மற்ற காரணங்களையும் தெரிந்துகொள்வது நலம். 

1. மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது, உடலில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் விரிவடைகின்றன. இது உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவது மட்டுமில்லாமல், மென்மையாக்குகிறது. எனவே, மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பை விட, மாதவிடாய் ஏற்பட்ட பிறகு மார்பகம் பெரிதாகலாம். 
 


2. தாய்மையடைதல்

கர்ப்ப காலத்தின் போது, உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, கர்ப்ப காலத்தில் மார்பக அளவு அதிகரிப்பது முற்றிலும் இயல்பான ஒரு நிகழ்வுதான். கர்ப்ப காலத்தில் நமது மார்பக திசுக்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மார்பகங்கள் பெரிதாகலாம். 

3. உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை கூடும் போது மார்பகமும் பெரிதாகும். மார்பகங்களில் மார்பக திசு, கன்டியூட்ஸ், லோபில்ஸ் மற்றும் கொழுப்பு திசுக்கள் உள்ளன. எனவே நம் உடல் பெரிதாகும்போது மார்பகங்களும் பெரிதாகின்றன.
 

4. பாலுறவு

பாலுறவின் போது உணர்ச்சிவயப்பட நிலையில் ஈடுபடும் செயல்கள் மார்பகங்களை பெரிதாக்கலாம். 

5. கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகளில் உள்ள சில வேதிப்பொருட்கள் மார்பக அளவுகளைப் பெரிதாக்கலாம். 

6. மார்பக கட்டிகள்

மார்பக கட்டிகள் ஏற்பட்டால் மார்பகங்கள் பெரும்பாலும் பெரிதாகவே இருக்கும். இதற்கு மருத்துவ கவனிப்பு அவசியம் ஆகும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

7.உடற்பயிற்சி இல்லாமை

தினமும் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் கச்சிதமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யாமல், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், மார்பகம் பெரிதாகவிடும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------