முகப்பு »  நலவாழ்வு »  இஞ்சி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

இஞ்சி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

இஞ்சியின் வேர் பகுதியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடித்து வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்

இஞ்சி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடல் உபாதைகளை முழுமையாக குணப்படுத்த கூடிய மகத்துவம் கொண்டது இஞ்சி. இஞ்சியில் உடலுக்கு தேவையான இயற்கை இரசாயணங்கள் நிறைந்திருக்கிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடையும் குறைகிறது. மேலும் உங்கள் உடல் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இஞ்சியை உணவில் அல்லது சாறு எடுத்து சாப்பிடலாம். இஞ்சியின் வேர் பகுதியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடித்து வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.

செரிமானம் சீராக இருக்கும்

தொடர்ச்சியாக இஞ்சி சாறு குடித்து வந்தால் ஜீரண கோளாறுகள் வராமல் இருக்கும். இதனால் குமட்டல் மற்றும் வாந்தி நிற்கும்.


கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது

உடலில் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நீர்ச்சத்தை தக்கவைக்கும்

தினசரி உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நாம் அருந்துகிறோமா என்பது சந்தேகம் தான். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். அதனால் இஞ்சி தண்ணீர் குடித்தால் உடலில் நீர்த்தேக்கம் போதியளவு இருக்கும்.

ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை

இஞ்சியில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால், உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. உடலில் வீக்கம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. அதனை போக்க இஞ்சி சிறந்த மருந்தாக இருக்கிறது.

ஆண்டிஆக்ஸிடண்ட் தன்மை

பல நோய்கள் வராமல் தடுக்க உடலில் ஆண்டிஆக்ஸிடண்ட் தேவை. இஞ்சியில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இதய நோய்கள், அல்சீமர், புற்றுநோய் போன்றவை தடுக்கப்படுகிறது.

நீரிழிவு நோய்

உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது. எனவே, இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைய

சரியான உணவு பழக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி ஆகியவையுடன் சேர்த்து இஞ்சி சாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------