முகப்பு »  நலவாழ்வு »  நீரிழிவு வரப்போவதற்கான மூன்று அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

நீரிழிவு வரப்போவதற்கான மூன்று அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

உங்களுக்கு நீரிழிவு உள்ளதாகக்  கண்டறியப்படாத நிலையில், நீரிழிவு வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய முடியும்

நீரிழிவு  வரப்போவதற்கான மூன்று அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

சிறப்பம்சங்கள்

  1. உயர் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு இரண்டாலும் நீரிழிவு ஏற்படும்
  2. தோல் தடித்தல், பார்வை மங்குதல் ஆகியவை நீரிழிவுகான சில அறிகுறிகள்
  3. குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்போது உடலில் திரவம் அதிக அளவு தேவைப்படுகிறது

உங்களுக்கு நீரிழிவு உள்ளதாகக்  கண்டறியப்படாத நிலையில், நீரிழிவு வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய முடியும். அதற்கு உதவும் சில அறிகுறிகள் இங்கே:

உங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் போதும், ​​ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு உங்கள் உடலில் உயரும்போதும் நீரிழிவு படிப்படியாக ஏற்படுகிறது. குளுக்கோஸ் அளவு உடலில் நீண்ட காலத்திற்கு அதிகமாக இருந்தால் பிரச்சினை வரும். ஏனெனில் கணையம் அப்போது போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது. உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால், நீரிழிவு வகை 2 ஏற்படும். உணவு, சரியான எடையைப் பராமரித்தல் இதில் இருந்து தப்பிக்க உதவலாம். மரபணுக்கள், பரம்பரையில் யாருக்காவது நீரிழிவு, மோசமான உணவுப் பழக்கம், நெருக்கடியான வாழ்க்கை முறை ஆகியவை இவை ஏற்படக் காரணிகள்.

cb9pt8ao

நீரிழிவு வருவதற்கான ஐந்து அறிகுறிகள்:

1. அதிக சோர்வு

வேலைப்பளு அதிகமான ஒரு நாளின் முடிவில் நீங்கள் சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால் நாள் முழுதும் சோர்வாக, தளர்வாக உணர்வது சரியில்லை. இதற்குக் காரணம் குளுக்கோஸ் சரியாக ரத்தத்தில் சென்று கலக்காதது. அதனால் உங்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காதது.

fmksu7

2. அதிகமாக முடி கொட்டுதல்

வேலைப்பளு, மருந்துகளை உட்கொள்ளுதல், பரம்பரை இவை இல்லாமல் உங்களுக்கு அதிகமாக முடி கொட்டினால் உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆய்வு செய்ய வேண்டும். இன்சுலின் அளவு உடலில் மாறும்போது முடி அதிகமாகக் கொட்டும். நீரிழிவு ஏற்படவோ, நீரிழிவு வகை 2 ஏற்படவோ வாய்ப்பு உண்டு. 

aaputft8

3. தோல் தடித்தல்

ஆய்வுகளின்படி உங்கள் தோல் சிவந்திருந்தாலோ, பிரவுன் அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலோ கவனிக்க வேண்டும். தோல் மருத்துவர்கள் சொல்வது உங்கள் தோல் பளபளப்பாக இருந்தாலோ, செதில் செதிலாக அரிப்பு ஏற்பட்டாலோ, இரத்த நாளங்கள் தெரிவதுபோல தோல் இருந்தாலோ உங்கள் ரத்தத்தில் அதிக இன்சுலின் இருப்பதை அவை காட்டுகிறது.

30jg22j8

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------