முகப்பு »  நலவாழ்வு »  இவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!!

இவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!!

ப்ரோபையோடிக் உணவுகளுள் யோகர்ட் சிறந்தது.  இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.

இவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!!

சிறப்பம்சங்கள்

  1. தினமும் யோகர்ட் சாப்பிட்டு வரலாம்.
  2. மஞ்சளில் மருத்துவ குணங்கள் மிகுதியாக இருக்கிறது.
  3. வைட்டமின் சி உணவுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருந்தால் மட்டுமே உடல் உபாதைகளில் இருந்து தப்ப முடியும்.  கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.  வாழ்வியல் முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, மதுப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, இழக்க செய்யும்.  இதனால் மிக எளிதில் கிருமி தொற்றுக்கு ஆளாகி, நோய்களின் தாக்கம் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இயற்கை உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.  

சிட்ரஸ் பழங்கள்: 
வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த சிட்ரஸ் பழங்களை சாப்பிடும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இது வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.  கிருமிகளுடன் போராடி நோய்களின் அபாயத்தை தவிர்க்க இரத்த வெள்ளை அணுக்கள் உதவுகிறது.  ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, க்ரேப்ஃப்ரூட் போன்ற பழங்களில் வைட்டமின் சி இருப்பதால் அடிக்கடி இதனை சாப்பிட்டு வரலாம். 
 


lpf4afso

மஞ்சள்: 
மஞ்சள் மருத்துவ மகத்துவம் கொண்டது.  இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  மஞ்சளை உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.  

யோகர்ட்: 
ப்ரோபையோடிக் உணவுகளுள் யோகர்ட் சிறந்தது.  இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.  யோகர்ட்டுடன் பழங்கள் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும்.  ஃப்ளேவர் அல்லது கொழுப்பு அதிகம் உள்ள யோகர்ட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.  

தேநீர்: 
தேநீர் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் தேநீர் குடித்து காலையை துவங்குவதால் புத்துணர்வாக இருக்கலாம்.  கிரீன் டீ, ப்ளாக் டீ, இஞ்சி டீ, பட்டை டீ, மஞ்சள் அல்லது கேமோமைல் டீ ஆகியவற்றை குடித்து வரலாம்.  
 

 

pu0m722

பட்டை: 
உணவுக்கு சுவை சேர்க்கும் பட்டையில் மருத்துவ குணங்களும் இருக்கிறது.  நீரிழிவு நோய், பிசிஓடி, இருதய ஆரோக்கியம் போன்றவற்றை சீராக வைக்கிறது.  உடல் எடை குறைக்க உதவும்.  உணவுகளில் பட்டை சேர்த்து கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------