முகப்பு »  நலவாழ்வு »  உங்கள் டயட்டில் இருக்க வேண்டிய விட்டமின் டி உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இவைதான்

உங்கள் டயட்டில் இருக்க வேண்டிய விட்டமின் டி உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இவைதான்

விட்டமின் டி குறைந்தால் மன அழுத்தம், இதய நோய் மற்றும் விந்து சுரப்பி புற்றுநோய் ஆகியவற்றிற்கான ஆபத்தை வெகுவாக அதிகரிக்கலாம்.

உங்கள் டயட்டில் இருக்க வேண்டிய விட்டமின் டி உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இவைதான்

Diet for Vitamin D: கொழுப்பு உள்ள மீன் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி உள்ளது

சிறப்பம்சங்கள்

  1. வலுவான எலும்பிற்கு விட்டமின் டி அவசியம்
  2. சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது
  3. காளானின் விட்டமின் டி உள்ளது

உடலின் செயல்பாட்டுக்கு விட்டமின் டி முக்கிய பங்கினை வகிக்கிறது. சூரிய ஒளி முன்னிலையில் உடலில் ஒருங்கிணைக்கப்படும் ஒரே ஊட்டச்சத்து இது. புற ஊதாக்கதிர்களின் அபாயத்தை கருத்தில் கொண்டு மக்கள் கோடைக்காலத்தில் சருமத்தை துணிகளில் மூடி மறைத்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் உணவு ஆதாரங்களில் விட்டமின் டி தேவைப்படுகிறது. விட்டமின் டி குறைபாடு இல்லாதவர்கள் வலுவான எலும்புகளைக் கொண்டிருக்கின்றனர். விட்டமின் டி குறைந்தால் மன அழுத்தம், இதய நோய் மற்றும் விந்து சுரப்பி புற்றுநோய் ஆகியவற்றிற்கான ஆபத்தை வெகுவாக அதிகரிக்கலாம். 

எனவே, விட்டமின் டி உள்ள உணவுகள் உடலில் விட்டமின் டி அளவு குறைப்பாட்டை தடுக்க உதவும் 

1. முட்டையின் மஞ்சள் கரு:


உடல் எடைக் குறைக்கும் எண்ணத்தில் மஞ்சள் கருவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தீர்கள் என்றால் மீண்டும்  அதை சாப்பிட தொடங்குங்கள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்து மற்றும் விட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளது. 

2. சாலமன் மீன்:

கொழுப்பு அதிகமுள்ள மீனை சாப்பிடும் பொழுது விட்டமின் டி யின் அளவு அதிகரிக்கிறது. விட்டமின் டி குறைவாக உள்ளவர்கள் கொழுப்பு சத்து சாலமன் ட்யூனா, ஆகிய மீன்களை சாப்பிடலாம். 

krtr12d8

3. காளான்:

காளான்கள் விட்டமின் டி உள்ள ஆரோக்கியமான சைவ உணவாக இருக்கும். காளானில் விதவிதமான உணவுகளை தயாரிக்க முடியும். காளானை தொடர்ந்து சாப்பிடுவதால் விட்டமின் டி அளவை பராமரிக்க முடியும்.

 4. இறால்:

இறால் குறைந்த கொழுப்பு மற்றும் அதிகளவு விட்டமின் டி உள்ள உணவாகும். ஒமேகா 3 கொழுப்பு சத்து இதில் அதிகமுள்ளது. இதயத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. 

5. மீன் எண்ணெய்:

மீன் எண்ணெய் விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் இதை மருந்தாக எடுத்துக் கொள்வதை பார்க்கலாம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் விட்டமின் ஏ உள்ளது. 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com