முகப்பு »  நலவாழ்வு »  சிறுநீரக கற்களை தவிர்க்கும் உணவு பழக்கங்கள்!!

சிறுநீரக கற்களை தவிர்க்கும் உணவு பழக்கங்கள்!!

பழங்களில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்கும்.  பழங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் ஃப்ரோசன் ஃப்ரூட்ஸ் போன்றவை சிறுநீரகத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

சிறுநீரக கற்களை தவிர்க்கும் உணவு பழக்கங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாது.
  2. காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
  3. உப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு நம் உணவு பழக்கமும் ஒரு காரணம். நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கும் நச்சுக்கள் எல்லாம் சிறுநீர் வழியாகத்தான் வெளியேறும்.  மினரல் மற்றும் உப்பு காரணமாகதான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.  சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறும்போது அதிகபடியான வழி இருக்கும்.  அதிகபடியான புரதம் மற்றும் உப்பு சத்து நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாக அதிகபடியான வாய்ப்பு உள்ளது.  இது தவிர உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதபோதும் கற்கள் உருவாகும்.  DASH (Dietary Approaches to stop Hypertension) என்று சொல்லப்படும் உணவு பழக்கத்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, இருதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் இருக்கும்.   இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை தான் முக்கிய உணவுகள்.  

கால்சியம் மற்றும் ஆக்ஸலேட்:


பால், தயிர், பெர்ரீஸ் மற்றும் கீரை ஆகியவற்றில் கால்சியம், ஆக்ஸலேட் போன்றவை இருக்கிறது.  இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்கிறது.  

j90kd84 

தண்ணீர்:

காலை எழுந்ததும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  அப்போதுதான் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாக இருக்கும்.  நிறைய தண்ணீர் குடிக்கும்போது, சிஸ்டின் மற்றும் யூரிக் அமில கற்கள் உருவாகாமல் இருக்கும்.  

புரதம்:

பருப்ப வகைகள், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.  அசைவத்தில் இருந்து கிடைக்கப்படும் புரதத்தை காட்டிலும் சைவ உணவுகளில் கிடைக்கும் புரதம் தான் உடலுக்கு கூடுதல் பலனை தருகிறது.  உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்தும் மெட்டபாலிசத்தை பொருத்தும் புரத உணவுகளை மருத்துவரின் ஆலோசனைபடி சாப்பிடலாம்.

பழங்கள்:

பழங்களில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்கும்.  பழங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் ஃப்ரோசன் ஃப்ரூட்ஸ் போன்றவை சிறுநீரகத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

காய்கறிகள்:

பீட்ரூட் மற்றும் கீரை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இத்துடன் கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். 

தவிர்க்க வேண்டியவை:

பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.  முட்டை, கோழி, ஆடு, மின், மற்றும் பால் பொருட்களில் உள்ள புரதங்களை அளவாக சாப்பிட வேண்டும்.  உப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.  இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------