முகப்பு »  ஹெச்.ஐ.வி/ எய்ட்ஸ் »  எச்.ஐ.வி.யின் ஆரம்பகால அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

எச்.ஐ.வி.யின் ஆரம்பகால அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

எச்.ஐ.வி என்பது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைப் பலவீனப்படுத்தும் ஒரு நோய்

எச்.ஐ.வி.யின் ஆரம்பகால அறிகுறிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

எச்.ஐ.வி என்பது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைப் பலவீனப்படுத்தும் ஒரு நோய்.

எச்.ஐ.விக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது காலம் செல்லச் செல்ல அதிகரித்துக்கொண்டே போகும். காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி HIVஇன் மிகப் பொதுவான அறிகுறிகள்.

எச்.ஐ.வியின் 7 ஆரம்ப அறிகுறிகள் இதோ.


1. காய்ச்சல்

காய்ச்சல் எச்.ஐ.வியின் முக்கிய அறிகுறியாகும். ஆரம்ப கட்டங்களில், இந்தக் காய்ச்சல் கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். இது இரவில் வியர்வையுடன் சேர்ந்து வரும். இந்த அறிகுறியை உடனே கவனிக்கவும்.

fever
 

2. இரவில் வியர்வை

அதிக வியர்வை காரணமாக நீங்கள் இரவில் தூங்க முடியாது, இது கவலைப்பட வேண்டிய ஒரு அறிகுறி . எச்.ஐ.வி. தொற்றுநோயால் பாதிக்கபட்டவர்களுக்கு அதிக அளவில் வியர்வை வரும்,உடைகள் மற்றும் தாள்கள் நனையும் அளவு வரும். இதனை உடனே கவனியுங்கள்.

3. தொண்டைப் புண்

காய்ச்சலுக்கு முன்பு தொண்டைப் புண் ஏற்படும் . இது எச்.ஐ.வி யின் மிக முக்கியமான, ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது உணவு, தண்ணீர் மற்றும் உமிழ் நீர் விழுங்குவதில் சிரமம் ஏற்படுத்தும். சில சமயங்களில், இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் மற்றும் காய்ச்சலும் இதனுடன் சேர்ந்துகொள்ளலாம்.

health natural sinus throat
 

4. தோல்வியாதி

இந்த அறிகுறியைக் கிட்டத்தட்ட 83% நோயாளிகளில் காணலாம். உங்களுக்கு மூன்று வாரங்கள் வரை சில பகுதிகளில் தோல் சிவந்து,தடித்துக் காணப்படும். அரிப்பும் ஏற்படலாம். அதை உடனே கவனியுங்கள்.

skin rashes

5. சோர்வு

எச்.ஐ.வி உடைய நபர் தொடர்ச்சியான சோர்வு மற்றும் சக்தி குறைவுக்கு ஆளாகிறார். நல்ல இரவுத் தூக்கத்திற்குப் பிறகும் அவர்கள் புத்துணர்ச்சி பெறமாட்டார்கள். பெரும்பாலும், அவர்கள் இரவில் வியர்வையால் ஒழுங்காகத் தூங்க முடியாது, இது எச்.ஐ.வி யின் முக்கியமான ஆரம்ப அறிகுறியாகும், ஆனால் இந்த அறிகுறி பொதுவாக மக்களால் புறக்கணிக்கப்படுகிறது.

chronic fatigue is a serious health issue

6. நிணநீர் வீக்கம் மற்றும் தசைவலி

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நிணநீர்க் கணைகள் ஒரு முக்கியப் பகுதியாகும். அது உங்கள் உடலை நோய்த் தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கும். உங்கள் உடல் எச்.ஐ.வியால் பாதிக்கப்படும்போது இந்த முனைகள் வீக்கம் கொள்ளும். மேலும் தசை மற்றும் மூட்டு வலி சேர்ந்துகொள்ளும். இந்த முனைகள் உங்கள் கைகள், கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் காணப்படும்.

7. குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி எச்.ஐ.வி யின் பொதுவான அறிகுறிகள். எச்.ஐ.வி உங்கள் உடலைத் தாக்குகையில் இது நடக்கும். இப்போது எச்.ஐ.வி வைரஸ் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பைப் பலவீனப்படுத்தியதால், உங்கள் உடல் தொற்றுநோய்களைத் தாக்குவதில் தோல்வியடைகிறது , இதனால் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் நீங்கள் ஈடுபட்டிருந்தால், நீண்ட காலமாக குமட்டல் ஏற்பட்டிருந்தால், நீங்கள் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், வரும்முன் காப்போம்.

vomiting and heartburn
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com