முகப்பு »  இருதயம் »  உடல் எடை மற்றும் இரத்த அழுத்தம் குறைக்கும் பீட்ரூட்!!

உடல் எடை மற்றும் இரத்த அழுத்தம் குறைக்கும் பீட்ரூட்!!

தினமும் உங்கள் உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

உடல் எடை மற்றும் இரத்த அழுத்தம் குறைக்கும் பீட்ரூட்!!

சிறப்பம்சங்கள்

  1. பீட்ரூட் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து உடல் இயக்கத்தை அதிகரிக்கிறது.
  2. பீட்ரூட் செரிமானத்தை அதிகரிக்கிறது.
  3. பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும்.

உயர் இரத்த அழுத்தத்தால் அவதி படுகிறீர்களா?  கவலையை விடுங்கள்.  உங்களுக்காகவே இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் பீட்ரூட்.  பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோக்ளோபின் அதிகரிக்கிறது.  உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் குறைகிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.  மேலும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் பி மூளை செயல்பாட்டை அதிகரித்து, இருதய துடிப்பையும் சீராக்குகிறது.  உடலிலுள்ள செல்களின் தகவல் பரிமாற்றத்திற்கு நைட்ரிக் ஆக்ஸைடு மிகவும் அத்தியாவசியமானது.  அப்படிப்பட்ட நைட்ரிக் ஆக்ஸைடு பீட்ரூட்டில் அதிகம். 

பீட்ரூட்டில் அதிகபடியாக நைட்ரேட் இருக்கிறது.  இதனை சாப்பிடும்போது உடல் அந்த நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றிக்கொள்ளும்.  சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைத்து ஹைபர்டென்ஷனை சரிசெய்கிறது.  மேலும் பீட்ரூட்டில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடலில் கொழுப்பு சேராது  இதில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் இருக்கிறது. 

pb0pt71

செரிமானத்தை சீராக்குகிறது:

பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்னைகள் ஏற்படாது.  இதனால் மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகள் இல்லாமல் இருக்க உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. 

ருசி நிறைந்தது:

பீட்ரூட்டில் சாறு, பொரியல் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம்.  ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  ஆனால் இதனையும் அளவாக குடிப்பது நல்லது.  இரத்த அழுத்தத்தை உடனடியாக குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதால் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. 

வீக்கத்தை குறைக்கக்கூடியது:

பீட்ரூட்டில் பீட்டாலைன்ஸ் என்னும் பிங்மண்ட் இருக்கிறது.  இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது.  இருதய நோய் மற்றும் உடல் பருமன் பிரச்னைகளை ஏற்படாமல் இருக்க பீட்ரூட் சாப்பிடலாம். 

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்:

பீட்ரூட்டில் இருக்கக்கூடிய நைட்ரேட் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.  வயது முதிர்ச்சி காரணமாக மூளையின் செயல்பாடு குறையாதவாறு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து மூளையின் முன் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.  ஃப்ராண்டல் லோப் என்று சொல்லப்படும் மூளையின் முன் பகுதிதான் ஞாபகத்திறன் மற்றும் முடிவுகள் எடுக்க பயன்படுகிறது. 

உடல் இயக்கத்தை அதிகரிக்கிறது:

நைட்ரேட் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிடுவதால் உடல் இயக்கம் வேகமாகிறது.  ஆக்ஸிஜன் பயன்பாட்டை அதிகரிக்க செய்கிறது.  இதில் இருக்கும் நைட்ரேட் செல்களில் ஆற்றலை உற்பத்தி செய்யும் மைட்டோகான்ட்ரியாவின் திறனை அதிகரிக்க செய்கிறது.  அகவே, தினமும் உங்கள் உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com