முகப்பு »  கண்கள் »  சோம்பேறி கண் என்னும் ஆம்ப்ளியோப்பியா

சோம்பேறி கண் என்னும் ஆம்ப்ளியோப்பியா

மாறுகண் இருக்கும் குழந்தை நல்ல கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். மாறுகண் மூலம் பார்வை வித்தியாசமாகவும், மங்கலாகவும் தெரியும்.

சோம்பேறி கண் என்னும் ஆம்ப்ளியோப்பியா

சோம்பேறி கண் (Lazy eye) என்று சொல்லப்படுகிற ஆம்ப்ளியோப்பியா (Amblyopia) சின்ன குழந்தைகளையே அதிகம் தாக்கும் ஒருவித கண் குறைபாடு. அதாவது பார்வை குறைபாடு, மாறுகண் போன்றவற்றை குழந்தையின் 8 முதல் 10 வயதிற்குள்ளாகவே கண்டுபிடித்தோமானால் இதனை விரைவில் குணப்படுத்தலாம். சிலர் மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்ற தவறான புரிதலில் இருப்பார்கள். இது நிச்சயம் மூட நம்பிக்கை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

எப்படி கண்டுப்பிடிப்பது?

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள்ளாக கண்ணிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும் என்பது அறிவியல் ரீதியான தகவல். கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பியல் இணைப்பு அதிவேகமாக வளர்ச்சி அடையும் காலக்கட்டம் இது. மாறுகண் இருக்கும் குழந்தை நல்ல கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். மாறுகண் மூலம் பார்வை வித்தியாசமாகவும், மங்கலாகவும் தெரியும். இந்த இரு கண் பார்வையும் மூளையை சென்றடையும் போது, இரண்டு பிம்பங்களையும் இணைப்பதற்கு மூளை பெரும்பாடு படும். இந்நிலை தொடரும் போது, மூளை சோர்வடையும். மேலும் நல்ல கண்ணின் பார்வையை மட்டும் எடுத்துக் கொண்டு மாறுகண்ணால் அனுப்பப்படும் பார்வையை மூளை நாளடைவில் புறக்கணித்துவிடும். அதனால், குழந்தையால் ஒன்றை தெளிவாக பார்க்க முடியாவிட்டால் அல்லது மாறுகண்ணாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுகுங்கள்.
 


g3bmogso

சிகிச்சை முறை

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

பெற்றோர்கள் கவனத்திற்கு

குழந்தைகளின் கண் நலத்தில் பெற்றோர்களின் பங்கு முக்கியம். நெருங்கிய உறவினருக்குள் அல்லது பரம்பரை கண் நோய் உள்ள குடும்பங்களுக்குள் திருமண உறவை தவிர்த்தால், அடுத்த தலைமுறையில் உருவாகும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. கை வைத்தியம் அல்லது கேள்விப்பட்டதை எல்லாம் வைத்து குழந்தையின் கண்ணில் விளையாட வேண்டாம். குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் மற்றும் 3 வயதில், அதன் பின் வருடா வருடம் கண் மருத்துவரிடம் அழைத்து சென்று கண் பரிசோதனை செய்யத் தவற வேண்டாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------