முகப்பு »  உணர்வுகள் »  பதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்!!

பதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்!!

நம் மனநிலையை எலுமிச்சையின் நறுமணம் மேம்படுத்தும்.  எலுமிச்சை எண்ணெயில் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய தன்மை இருக்கிறது. 

பதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. பதற்றத்தை போக்க பல இயற்கை எண்ணெய்கள் இருக்கிறது.
  2. லேவண்டர், எலுமிச்சை போன்ற எண்ணெய்களில் மருத்துவ குணம் இருக்கிறது.
  3. இவை மனதை ஆற்றுப்படுத்த பயன்படுகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் பதற்றம் மனநோயாகவே மாறிவிட்டது.  அதிகபடியான மன அழுத்தம், சோகம் மற்றும் கோவம் போன்ற உணர்வுகள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.  இந்த பதற்றத்தை முன்கூட்டியே சரிசெய்யாவிட்டால் கடுமையான மனநோயாக மாறிவிடும்.  ஆனால் சில நறுமண எண்ணெய்களை கொண்டு மனதையும் உடலையும் ஆற்றுப்படுத்த முடியும்.  அப்படிப்பட்ட எசன்ஷியல் ஆயில்கள் சிலவற்றை பார்ப்போம். 

லேவண்டர்:

அரோமாதெரபியில் பயன்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்களுள் லேவண்டர் எண்ணெயும் ஒன்று.  இதில் உடல் மற்றும் மனதில் உள்ள சோர்வை போக்கும் தன்மை இருக்கிறது.  கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.  குளிக்கும்போது சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் சேர்த்து குளித்து வரலாம். 


3hjllqv

மல்லிகை:

மல்லிகையில் நறுமணம் பதற்றத்தை குறைக்க உதவும்.  இதில் ஆண்டி-டிப்ரெசண்ட் தன்மை மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.  மனதை அமைதியாக்கி, தூக்கத்தை மேம்படுத்தும்.  தூக்கமின்மை பிரச்னையை போக்கும்.  கழுத்து மற்றும் கைகளில் இதனை சில சொட்டுகள் தடவி வரலாம். 

ரோஸ்:

ரோஜாவின் நறுமணம் சோர்வை போக்கி மனதை லேசாக்கும்.  மன அழுத்தம், சோர்வு, பதற்றம் அகியவற்றை போக்க இதனை பயன்படுத்தலாம். 

கேமோமைல்:

கேமோமைல் டீயில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதேயளவு கேமோமைல் எண்ணெயிலும் இருக்கிறது.  இந்த எண்ணெயை சிறிதளவு தண்ணீரில் கலந்து உடலுக்கு தடவலாம்.  அதேபோல நல்ல நீண்ட நேர உறக்கத்திற்கு கேமோமைல் டீ குடித்து வரலாம். 

எலுமிச்சை:

நம் மனநிலையை எலுமிச்சையின் நறுமணம் மேம்படுத்தும்.  எலுமிச்சை எண்ணெயில் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய தன்மை இருக்கிறது.  மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து எலுமிச்சை எண்ணெயையும் கலந்து உபயோகப்படுத்தலாம்.  வீடு முழுவதும் நல்ல நறுமணம் பரவ எலுமிச்சை எண்ணெய் பயன்படுத்தலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------