முகப்பு »  உணர்வுகள் »  பதட்டத்தை தூண்டும் 7 பழக்கங்கள்!!

பதட்டத்தை தூண்டும் 7 பழக்கங்கள்!!

உங்களை நீங்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்ப வேண்டும்.  உங்களை பற்றி உயர்வாக எண்ண வேண்டும்.  தாழ்வு மனப்பான்மை உங்களை மேலும் பல சிக்கல்களில் தள்ளிவிடும்.  

பதட்டத்தை தூண்டும் 7 பழக்கங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. பதட்டத்தை தவிர்க்க நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
  2. ஆழ்ந்த உறக்கம் இருக்குமானால் பதட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
  3. உங்கள் உணர்ச்சிகளை யாரிடமாவது வெளிப்படுத்துவது நல்லது.

நம்மில் பலருக்கும் பல காரணம் மற்றும் காரணிகளால் பதட்டம் ஏற்படும்.  இவற்றை கட்டுப்படுத்த நாம் சில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும்.  நாம் தெரிந்தோ தெரியாமலோ இவற்றை செய்து கொண்டிருப்போம்.  அப்படியான விஷயங்கள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.   

காபி: 

உடலில் இரத்த அழுத்தம் குறையும்போது காபி குடிப்பது ஒருவகையில் நமக்கு சௌகரியத்தை கொடுப்பதாக இருக்கும்.  ஆனால் காபி குடிப்பதால் மேலும் இருதய துடிப்பு அதிகரித்து, நடுக்கம், பதட்டம் போன்றவற்றை கொடுக்கும்.  ஆகையால் காபி குடிப்பதை தவிர்க்கவும்.  


தூக்கம்: 

நமக்கு சரியான ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும்போது, உடலில் தானாகவே பதட்டம் ஏற்படும்.  மேலும் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற தன்மை, மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.  

உணர்ச்சி நிலை: 

உணர்ச்சி நிலைகளில் ஏற்ற இறக்கம் ஏற்பட நம் எண்ணங்களே காரணம்.  கடந்த காலத்தில் நடந்தது அல்லது நடக்க போவது குறித்து சிந்தித்து கொண்டே இருந்தால் நமக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.  இவை பதட்டத்தை மேலும் அதிகரிக்கும். 

தொலைப்பேசி: 

அடிக்கடி தொலைப்பேசியை பார்த்து கொண்டே இருப்பதும் பதட்டம் ஏற்பட காரணமாகிறது.  செல்போன் பயன்பாடு அதிகபடியாக இருந்தால் உணர்ச்சி நிலைகள் சீரற்று இருக்கும்.  

உணவு: 

நாள் ஒன்றிற்கு தேவையான ஆற்றலை தரக்கூடியது உணவு.  மூன்று வேளையும் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.  உடலுக்கு தேவையான உணவு சரியாக எடுத்து கொள்ளாவிட்டால் கூட பதட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

தனிமை: 

உங்களை பதட்டம் ஆட்கொண்டிருந்தால் கட்டாயமாக நீங்கள் சுற்றி நேர்மறையான எண்ணங்களை கொண்ட மனிதர்களை வைத்து கொள்ள வேண்டும்.  உங்கள் மனதிற்கு பிடித்த நண்பர்களுடன் நேரம் செலவிடலாம்.  உங்களை நீங்கள் தனிமைப்படுத்தி கொண்டால் பதட்டம் அதிகரிக்கும். 

சுய பரிசோதனை: 

உங்களை நீங்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்ப வேண்டும்.  உங்களை பற்றி உயர்வாக எண்ண வேண்டும்.  தாழ்வு மனப்பான்மை உங்களை மேலும் பல சிக்கல்களில் தள்ளிவிடும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------