முகப்பு »  நீரிழிவு »  டைப்-2 நீரிழிவு நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்!!

டைப்-2 நீரிழிவு நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீரிழிவு நோயால் இரத்த ஓட்டம் பாதிப்படையும் என்பதால் கை மற்றும் கால் பாதங்களில் வலி மற்றும் உணர்ச்சியின்மை ஏற்படும்.  

டைப்-2 நீரிழிவு நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. நீரிழிவு நோயால் அடிக்கடி பசியுணர்வு ஏற்படும்.
  2. காயங்கள் குணமாக நீண்ட காலம் தேவைப்படும்.
  3. ஈஸ்ட் தொற்றின் அபாயம் அதிகமாக இருக்கும்.

நீரிழிவு நோய் என்பது பொதுவாக இங்கு பலருக்கும் ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் முறை சிக்கல்தான்.  நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படும்.  டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்.  ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் தான் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடியது.  உடலில் இன்சுலின் சுரப்பு சீரற்ற தன்மை ஏற்படுவதே இதன் காரணம்.  நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

சிறுநீர்: 


நீரிழிவு நோய் ஏற்பட்டிருந்தால் இரத்தத்தில் இருந்து அதிகபடியான சர்க்கரை வெளியேற்ற சிறுநீரகம் முற்படும்.  இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபாதை ஏற்படும்.  

தாகம்: 

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.  உடலில் நீர்ச்சத்து போதாமை ஏற்படுவதால் தாகம் அதிகமாக இருக்கும்.  

0ih2sqr8

சோர்வு: 

எப்போதுமே உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்.  உடலில் உள்ள செல்களுக்கெல்லாம் அதற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகும்.  

பசி: 

செரிமான மண்டலம் உடலுக்கு கிடைத்த சர்க்கரையை க்ளுக்கோஸாக மாற்றும்.  நீரிழிவு பாதிப்பால் செல்களுக்கு போதிய அளவு க்ளுக்கோஸ் கிடைப்பதில்லை.  இதனால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படும்.  

பார்வை குறைபாடு: 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் கண்களில் இருக்கும் சிறு இரத்த நாளங்கள் பாதிக்கப்படும்.  இதனால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும்.  

காயங்கள்:

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்காது.  இதனால் காயங்கள் குணமாவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம்.  

கை மற்றும் கால் வலி: 

நீரிழிவு நோயால் இரத்த ஓட்டம் பாதிப்படையும் என்பதால் கை மற்றும் கால் பாதங்களில் வலி மற்றும் உணர்ச்சியின்மை ஏற்படும்.  

நோய் தொற்று: 

ஈஸ்ட் மற்றும் ஃபங்கல் நோய் தொற்று ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிக எளிதில் தாக்கிவிடும்.  குறிப்பாக வாய், அக்குள் போன்ற இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படும்.  மேலும் அரிப்பு, சிவந்து போதல் போன்ற பிரச்சனையும் ஏற்படும்.   

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com