முகப்பு »  நீரிழிவு »  ஒட்டகப் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் என்னென்ன…? அறிந்து கொள்வோமா

ஒட்டகப் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் என்னென்ன…? அறிந்து கொள்வோமா

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாட்டர்டு ஃபேட்டி ஆசிட்ஸும் இதில் உள்ளது.

ஒட்டகப் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் என்னென்ன…? அறிந்து கொள்வோமா

ஓட்டகப்பாலில் உள்ள இன்சுலின் மனித உடலால் எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று

சிறப்பம்சங்கள்

  1. மார்க்கெட்டில் தேங்காய் பால்,சோயா பால், பாதாம் பால், அரிசி பால், பல உண்டு
  2. ஓட்டகப்பாலில் உள்ள இன்சுலின் மனித உடலில் எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்
  3. ஒட்டகப் பால் சிகிச்சை முறைகளுக்கு பயன்படுகிறது

இன்றைய காலங்களில் மக்கள் பலர் டெய்ரி-ஃப்ரி பாலை தேடுகிறார்கள். பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு அலர்ஜியைக் கொடுக்கலாம். அல்லது விலங்கினங்கள் ஹார்மோன் ஊசி போட்டு வளர்ப்பதால் அதனால் பாலிலும் அதன் பாதிப்பு இருக்கும் எனப் பயந்து பலரும்  விலங்கினங்கள் வழி கிடைக்கும் பாலை விரும்புவது இல்லை. இதற்கு மாற்றாக பல வகையான பால் மார்க்கெட்டில் உள்ளது. தேங்காய் பால்,சோயா பால், பாதாம் பால், அரிசி பால்,ஓட்ஸ் பால் எனப் பல வகைகள் இருக்கின்றன. 

மேலே சொன்ன பால்களை பசும் பாலின் ஊட்டச்சத்துடன் ஒப்பிட முடியாது என்றாலும் இது எளிதாக ஜூரணமாகக் கூடிய ஒன்று. பால் தரும் விலங்கினங்களில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகப் பாலில் சாட்டர்டு ஃபேட்டி ஆசிட்ஸ் குறைவாக உள்ளது.  கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு பசும் பாலில் உள்ளது போலவே இருக்கிறது.

இதில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாட்டர்டு ஃபேட்டி  ஆசிட்ஸும் இதில் உள்ளது. இதில் அதிகப்படியான அளவில் மக்னீசியம், சின்க் மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின்கள் சி, பி2 ஏ மற்றும் ஈ ஆகியவை  உள்ளது. ஒட்டகப் பால் தாய்ப்பாலுக்கு இணையானது. 


339f9i48

மாட்டுப் பாலில் உள்ளது போன்ற இயற்கையான இன்சுலில் மாதிரியான புரதம் ஒட்டகப்பாலிலும் உள்ளது. ஒட்டகப் பாலில் குறைந்த அளவே லாக்டேஸ் இருப்பதால் லாக்டோஸ் அலர்ஜி  உள்ளவர்கள் இதைக் குடிக்கலாம். இதனால் பசும்பாலுக்கு இணையான ஊட்டச்சத்ததை ஒட்டக்ப்பாலில் பெறலாம்.

மேலும், இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஒட்டகப் பாலில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஆகியவற்றுக்கு எதிர்த்து போராடக் கூடிய, மிகவும் தனித்துவமான  ஊட்டச்சத்து உள்ளது. மஞ்சள் காமாலை, அனீமியா, ஆட்டிசம், சர்க்கரை வியாதி ஆகியவற்றிற்கு நேயெதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. ஓட்டகப்பாலில் உள்ள இன்சுலின் மனித உடலால் எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இதனால் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. 

பெரிய அளவில் ஒட்டகப் பால் குறித்து அறிவும் புரிதலும் ஏற்படவில்லை. எதுவானாலும் ஒட்டகப் பால் சிகிச்சை முறைகளுக்கும்  பசும் பாலுக்கு மற்றொரு மாற்றாகவும் உள்ளது. 

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------