முகப்பு »  நீரிழிவு »  நீரிழிவு நோயை கட்டுப்படுத்த செலிப்ரிட்டி நியூட்ரிஷியனிஸ்ட் சொல்லும் குறிப்புகள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த செலிப்ரிட்டி நியூட்ரிஷியனிஸ்ட் சொல்லும் குறிப்புகள்

உடலில் இன்சுலினின் உற்பத்தி தாறுமாறாக அதிகரித்தோ அல்லது உடல் இன்சுலினின் உற்பத்திக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகிறது

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த செலிப்ரிட்டி நியூட்ரிஷியனிஸ்ட் சொல்லும் குறிப்புகள்

உடல் இன்சுலினின் உற்பத்தி எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகிறது.

சிறப்பம்சங்கள்

  1. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பி
  2. இரசாயன மாற்றத்திற்குட்படுத்தாத கரும்பு சர்க்கரையை டீ அல்லது காபியுடன் சே
  3. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடல் எடை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

நம் நாட்டில் பல்லாயிரம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவும் ஒருவகை வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடைய நோய்தான். உடலில் இன்சுலினின் உற்பத்தி தாறுமாறாக அதிகரித்தோ அல்லது உடல் இன்சுலினின் உற்பத்திக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகிறது. நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உணவு பழக்கத்தால் மட்டுமே எப்படி நீரிழிவு நோயை சீராக வைத்து கொள்வதென்பது குறித்து பார்ப்போம்.

பழங்கள் மற்றும் பாதாம் சாப்பிட்டு நாளை தொடங்குங்கள்

இரவு நீண்ட நேர உறக்கத்திற்கு பிறகு, காலை வெறும் வயிற்றில் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் பருவ காலங்களில் கிடைக்க கூடிய பழங்கள் அல்லது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு உங்கள் நாளை தொடங்குங்கள். காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்க வேண்டாம். இயற்கையாக கிடைக்க கூடிய உணவு பொருட்களில் அதாவது, ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் அல்லது பழங்கள் போன்றவற்றில் சர்க்கரை இருப்பதால் அதை சாப்பிட்டு உங்கள் உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ளலாம்.


42vhh9r8

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு உங்கள் நாளை தொடங்கலாம்.

மதிய உணவுடன் மோர் அருந்துங்கள்

நீரிழிவு மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, செரிமான மண்டலத்தில் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். எல்லா வேளையும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பாக மதிய உணவை 11 மணி முதல் 1 மணிக்குள் முடித்துவிட வேண்டும். தவறாமல் மதிய உணவுடன் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம். மேலும், உடலுக்கு தேவையான வைட்டமின் டி, பி12 போன்ற சத்துகள் கிடைக்கவும் உதவுகிறது.

உணவில் கடலை சேர்த்து கொள்ளலாம்

கடலையில் அமினோ அமிலம், வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்துள்ளது. தினமும் மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு பசி உணர்வில்லாமல் இருக்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்காகவே பிரத்யேகமாக தயாரித்து மார்க்கெட்களில் கிடைக்கும் பிஸ்கட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து கடலை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
 

8s34pegg

ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிட்டு உங்கள் உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ளலாம்

செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்கவும்

இந்த நீரிழிவு நோயானது இரத்த சர்க்கரையில் மட்டுமல்லாது, சிறுநீரகம், இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திலும் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியது. செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்த்து, இரசாயன மாற்றத்திற்குட்படுத்தாத கரும்பு சர்க்கரையை டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிடலாம். கொழுப்பு நீக்கப்படாத பால் மற்றும் கரும்பு சர்க்கரை சேர்த்து தினமும் 2 அல்லது 3 முறை டீ அல்லது காபி குடிக்கலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

lvefaajo

உடற்பயிற்சி செய்வதனால், நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்

வாரத்தில் இரண்டு முறை எடைப்பயிற்சி செய்யலாம்

நீரிழிவு நோயின் தாக்கத்தால், உடல் மெலிந்துவிடும். இதனை தடுக்க, உடல் எடை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம். பளு தூக்கும் பயிற்சி செய்வதனால், உடல் எடை அதிகரித்து, தசைகளுக்கு நல்ல அமைப்பு கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதனால், நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும். தினசரி நடைப்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதேபோல், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதும் முக்கியம்.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com