முகப்பு »  நீரிழிவு »  உடல் எடை குறைக்க உதவும் ஆப்பிள் சிடர் வினிகர்!!

உடல் எடை குறைக்க உதவும் ஆப்பிள் சிடர் வினிகர்!!

உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் இந்த ஆப்பிள் சிடர் வினிகர் இரத்தத்தில் ட்ரைக்ளிசரைட்ஸையும் குறைக்கிறது.  

உடல் எடை குறைக்க உதவும் ஆப்பிள் சிடர் வினிகர்!!

சிறப்பம்சங்கள்

  1. ஆப்பிள் சிடர் வினிகரில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு.
  2. உடலிலுள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
  3. நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் எல்லாவற்றிலுமே உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றன.  உதாரணமாக, மஞ்சள் மருத்துவ குணங்கள் நிறைந்தது.  தேங்காய் மற்றும் பாதாம் எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.  அதேபோல் உடல் எடை குறைப்பதற்கு பழங்கள், காய்கறிகள், எண்ணெய்கள் மற்றும் வினிகர் போன்றவற்றை சம விகிதத்தில் சேர்த்து கொள்ளலாம்.  நம் உடலில் மெட்டபாலிசம் சீராக இருக்க வேண்டுமென்றால் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமானது.  ஆப்பிள் சிடர் வினிகரை பல ஆண்டுகளாக அதன் மருத்துவ நன்மைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.  ஆப்பிளை மசித்து அத்துடன் ஈஸ்ட் சேர்த்து நொதிக்க செய்வதே ஆப்பிள் சிடர் வினிகர்.  

இரத்த சர்க்கரை: 


ஆப்பிள் சிடர் வினிகர் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.  

இன்சுலின்: 

உடலில் இன்சுலின் சுரப்பின் விகிதத்தை குறைத்து உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கவும் பயன்படுகிறது. 

மெட்டபாலிசம்: 

உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடிய என்சைமை சுரக்க செய்கிறது ஆப்பிள் சிடர் வினிகர்.  கல்லீரலில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை குறைக்க உதவுகிறது.  

r6m92f5

கொழுப்பு: 

உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் இந்த ஆப்பிள் சிடர் வினிகர் இரத்தத்தில் ட்ரைக்ளிசரைட்ஸையும் குறைக்கிறது.  

கலோரி: 

ஆப்பிள் சிடர் வினிகர் உங்களை நிறைவாக வைத்திருக்கும்.  இதனால் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறைக்கப்படும்.  உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.  

மருத்துவரின் பரிந்துரைப்படி இதனை பருகலாம்.  இதில் அமிலத்தன்மை இருப்பதால் ஈஸோபேகஸை பாதிக்கும்.  அதனால் ஒரு மேஜைக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகருடன் தண்ணீர் சேர்த்து பருகலாம்.  அல்லது இதனை சாலட் ட்ரெஸ்ஸிங்காக ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------