முகப்பு »  தோல் »  தீக்காயங்களுக்கான 10 எளிய வீட்டு சிகிச்சைகள்

தீக்காயங்களுக்கான 10 எளிய வீட்டு சிகிச்சைகள்

சமையல் அறையில் ஏற்படும் சுடு காயங்களில் இருந்து, நேரடி சூரிய ஒளியினால் வரும் காயங்களை வரை வெவ்வேறு வகைப்படும்

தீக்காயங்களுக்கான 10 எளிய வீட்டு சிகிச்சைகள்

சிறப்பம்சங்கள்

  1. தீக்காயங்களுக்கு தேய்காய் எண்ணெய் உபயோகிக்க கூடாது
  2. தீக்காயங்கள் மீது பற்பசை தேய்க்க கூடாது
  3. தீக்காயம் சிகிச்சைகளுக்கு தேன் உபயோகிக்கலாம்

தீக்காயங்கள் பல வகைப்படும். சமையல் அறையில் ஏற்படும் சுடு காயங்களில் இருந்து, நேரடி சூரிய ஒளியினால் வரும் காயங்களை வரை வெவ்வேறு வகைப்படும். தீக்காயங்களை நான்கு வகையாக பிரிக்கலாம். முதல் நிலை தீக்காயங்களில், சிறிய பாதிப்புகளே இருக்கும். இரண்டாம் நிலை தீக்காயங்களில், தோளில் பாதிப்புகள் இருக்கும், மூன்றாம் நிலை காயங்களில், தோள் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும், நான்காம் நிலை காயங்களில், எலும்பு பகுதி வரை பாதிக்கப்பட்டிருக்கும்.
 

skin
 

முதல் நிலை காயங்களில், வலி மற்றும் எரிச்சல் இருக்கும். இரண்டாம் நிலையில், வெள்ளை ஈரப்பதம் மிக்க கொப்புளங்கள் உண்டாகும். மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கொப்புளங்கள்

சருமத்தில் தீக்காயம் ஏற்பட்டால், கொப்புளங்கள் உண்டாகும். முதல் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகவும். கொப்புளங்களை அழுத்தவோ, தொடவோ கூடாது. அப்படி செய்தால், கிருமிகள் உண்டாகும்.

குளிர் தண்ணீர்

தோளில் தீக்காயம் ஏற்பட்டால், முதலில் குளிர் தண்ணீர் ஊற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் வைக்கவும். பின்பு, காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து கழுவ வேண்டும்

கற்றாளை ஜெல்

கற்றாளை, தோள் காயங்களுக்கு குளிர்ச்சி அளித்து காயம் விரைவில் குணமடையச் செய்யும். கற்றாளை இரத்த ஓட்டத்தை சீராக்கும். கற்றாளை ஜெல்லை, பாதிப்படைந்த தீ காயம் பகுதிகளில் நேரடியாக தேய்த்துவிடலாம்.


aloe vera gel

ஆண்டி பயாட்டிக் மருந்துகள்

தோளில் ஏற்பட்டுள்ள தீ காயங்களில் கிருமிகள் வராமல் தடுக்கவும், தொற்று ஏற்படாமல் இருக்கவும் ஆண்டி பயாட்டிக் மருந்துகள் உபயோகிக்க வேண்டும். க்ரீம் தேய்த்தவுடன், துணி கொண்டு மறைத்துவிட வேண்டும்.

வலி நிவாரணிகள்

பொதுவாக, வலி நிவாரணிகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும், இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், வலி அதிகமாக இருந்தால், சரியான அளவில் வலி நிவாரணிகள் எடுத்து கொள்ள வேண்டும்.

தேன்

தீக்காயங்களுக்கு தேன் உபயோகிக்கலாம். வீக்கம் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய குணங்கள் இருப்பதனால், தீ காயங்களின் மேல் தேன் தேய்க்கலாம்.

honey

Honey can help in healing skin burns
Photo Credit: iStock

ஒத்தடம்

தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில், சுத்தமான துணியை ஈரம் செய்து காயத்தின் மீது ஒத்தடம் வைக்க வேண்டும். இதனால் வலி குறைவதுடன் வீக்கம் ஏற்படுவதும் குறையும். 5 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒத்தடம் வைத்தால், காயம் குணமாகும்.

சூரிய ஒளி

தீக்காயம்பட்ட இடத்தில் சூரிய ஒளிபட்டால், எரிச்சல் மற்றும் வலி அதிகமாகும். எனவே, நேரடியாக சூரிய ஒளி படுவதில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

தோளில் தீ காயங்கள் ஏற்படும் போது, சிலவற்றை தவிர்க்க வேண்டும்

வெண்ணெய்

தீக்காயங்களுக்கு வெண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், தீக்காயம் மேலும் மோசமாகும்.

butter

பற்பசை

சிறய அளவில் தீ காயம், பற்பசையை தேய்த்தால், குணமாகிவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், பற்பசைகளை தேய்த்தால் தீக்காயம் குணமாகிவிடும் என்பதற்கான சான்று இல்லை, பற்பசைகளினால், அரிப்பு மற்றும் தொற்று அதிகமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

toothpaste
Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
coconut oil

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------