முகப்பு »  ஊட்டசத்து »  உடல் எடையிலிருந்து ரத்த அழுத்தம் வரை... கட்டுக்குள் வைக்கும் பேசில் விதைகள்!

உடல் எடையிலிருந்து ரத்த அழுத்தம் வரை... கட்டுக்குள் வைக்கும் பேசில் விதைகள்!

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் பேசில் விதைகள் பேசில் செடியிலிருந்து பெறப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். 

உடல் எடையிலிருந்து ரத்த அழுத்தம் வரை... கட்டுக்குள் வைக்கும் பேசில் விதைகள்!

Weight loss: Packed with proteins and fiber, basil seeds are perfect for weight loss.

சிறப்பம்சங்கள்

  1. Basil seeds are roughly of the same size as chia seeds
  2. Basil seeds can help control blood sugar levels
  3. Basil seeds are also known for their cooling effects on the body

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் பேசில் விதைகள் பேசில் செடியிலிருந்து பெறப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும்.  பார்ப்பதற்கு கறுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த சிறிய விதையில் ரிச்சான சத்துக்களான, நார்ச்சத்து, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ப்ரோட்டீன், மினரல்ஸ்னு ஏகப்பட்டவை இருக்கின்றன. இது சப்ஜா ஸீட், துக்மலாங்கா ஸீட் என்று அழைக்கப்படுகிறது. 

பிரபல உடற்பயிற்சியாளர் லுக் கொத்ன்ஹோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "சப்ஜா ஸீட்ஸின் அருமை பெருமைகளைக் கூறுகிறார். அதில். உடல் குளிர்ச்சிக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக்கட்டுப் படுத்தவும், முடிப் பிரச்னை, நெஞ்செரிச்சல், போன்றவற்றுக்கு இது உதவுவதாகவும், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luke Coutinho (@luke_coutinho) on

பேஸில் ஸீட்ஸின் பயன்கள்:

1) எடை குறைப்பு

உடல் எடை குறைப்பில் இது மிக் முக்கியப் பங்கு வகுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்னையை சரி செய்கிறது. சாலட் மற்றும் ஜூஸ்களில் கலந்து சாப்பிடலாம்.

2) ஆசிடிட்டி

இன்றைய வாழ்க்கை முறையில் ஆசிடிட்டி ஒரு பொதுவானப் பிரச்னைதான். உணவுல் பழக்கம் மாற்றத்தால் இந்த பிரச்னை வருகிறது, பேஸில் சீட்ஸ் ஒரு சிறந்த குளூரூட்டியாக இருப்பதால் உடலைக் குளிர்ச்சுயாக வைத்து ஆசிடிட்டிப் பிரச்னையை சரிசெய்கிறது.

3) மலச்சிக்கல்

நீரில் ஊரிய பேஸில் சீட்கள் குடலை சுத்தம் செய்யும் சக்தி வாய்ந்தது. இதனால் நீண்ட நாள் இருக்கக்கூடிய மலச்சிக்கலை போக்கும் சக்தி வாய்ந்தது. தூங்குவதற்கு முன்பு பாலுடன் சேர்த்துக் குடித்தால் சிறந்த பலனைத் தரும்.

4) குறைந்த ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்ததால் கொதிப்படைகிறீர்களா? பொட்டாசியம் நிறைந்த பேஸில் ஸீட் இதற்கு பெஸ்ட். பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைகு குறைத்து உங்களை கூலாக மாற்றுகிறது. 

5) ரத்தத்தில் சர்க்கரை அளவு.

ஒரு சிறந்த நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. முக்கியமாக டைப் 2 டயாபடீஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உடனே உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது இந்த ஸீட். இன்சுலினைக் கட்டுப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. 

6) குளிர்ச்சி

இந்த விதைகள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். காய்ச்சல் மற்றும் அழற்சியில் இருப்பவர்கள் இந்த விதையை எடுத்துக்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com