முகப்பு »  நலவாழ்வு »  எலும்புகளை உறுதியாக்க என்ன சாப்பிடலாம்??

எலும்புகளை உறுதியாக்க என்ன சாப்பிடலாம்??

இருதய நோய்கள் ஏற்படாமல் இருக்க வைட்டமின் கே நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  

எலும்புகளை உறுதியாக்க என்ன சாப்பிடலாம்??

சிறப்பம்சங்கள்

  1. ப்ரோக்கோலி மற்றும் கீரையில் வைட்டமின் கே உள்ளது.
  2. இரத்த கசிவை நிறுத்த வைட்டமின் கே உடலுக்கு தேவை.
  3. மேலும் எலும்புகளை உறுதியாக வைக்க வைட்டமின் கே தேவை.

 வைட்டமின் கே உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது.  இரத்தம் உறைவதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் கே கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும்.  ப்ரோக்கோலி, அஸ்பராகஸ், கீரை, பீன்ஸ், முட்டை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் கல்லீரல் போன்ற உணவுகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது.  உடலில் வைட்டமின் கே பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால் உடல் உபாதைகள் தானாகவே உருவாகும்.  ஏதெனும் காயம் ஏற்பட்டுவிட்டால் இரத்த கசிவு அதிகரித்து ஹீமரேஜ் என்னும் நோயை உண்டாக்கும்.  பொதுவாக பச்சிளங்குழந்தைகளுக்கு வைட்டமின் கே குறைபாடு அதிகமாக இருக்கும்.  பின் செரிமானம் மற்றும் கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் வைட்டமின் கே குறைபாடு ஏற்படும்.  அதிகபடியாக மது அருந்துபவர்களுக்கும் இக்குறைபாடு உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் கே என்னென்ன நன்மைகளை செய்கிறதென தெரிந்து கொள்ளுங்கள். 

qf0f60o

 


எலும்பு: 
வைட்டமின் கே நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தடுக்கப்படுகிறது.  எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதியை அதிகரிக்க செய்கிறது வைட்டமின் கே.  இதனால் எலும்பு முறிவு போன்றவை தடுக்கப்படுகிறது.  

ஞாபகத்திறன்: 
வயது அதிகரிக்கும்போது நம் ஞாபகத்திறன் குறைந்து கொண்டே இருக்கும்.  உடலில் வைட்டமின் கே சத்து சீராக இருந்தால் நினைவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் சீராக இருக்கும். 

இரத்த அழுத்தம்: 
இரத்த நாளங்களில் தாதுக்கள் தேங்கினால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது.  வைட்டமின் கே இரத்த நாளங்களில் தாதுக்களின் தேக்கத்தை தடுக்கிறது.  இதனால் இரத்த அழுத்தம் சீராகிறது. 

இருதய ஆரோக்கியம்: 
வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால் இருதய ஆரோக்கியம் கெட்டுவிடும்.  இருதய நோய்கள் ஏற்படாமல் இருக்க வைட்டமின் கே நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------