முகப்பு »  நலவாழ்வு »  பெருங்குடல் புண் : அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் தடுக்கும் வழிகள்!

பெருங்குடல் புண் : அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் தடுக்கும் வழிகள்!

37 வயதான நிடாஷாவிற்கு பெருங்குடல் புண் ஏற்பட்டதால், அது அவரது உடலில் சக்தியை கரைத்தது மட்டுமில்லாமல் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கியது

பெருங்குடல் புண் : அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் தடுக்கும் வழிகள்!

37 வயதான நிடாஷாவிற்கு பெருங்குடல் புண் ஏற்பட்டதால், அது அவரது உடலில் சக்தியை கரைத்தது மட்டுமில்லாமல் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கியது. பெருங்குடல் அழற்சி என்பது ஒரு அழற்சி குடல் நோயாகும், இது நீடித்த வீக்கம் மற்றும் புண்ணை உண்டாக்கி பெருங்குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கும். இதை பற்றி, நிடாஷா கூறுகையில் "பெருங்குடல் புண்ணோடு சேர்த்து, எனக்கு மூலமும் இருந்ததால் நான் மிகவும் அவதிப்பட்டேன். ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு பிறகும், நான் பல மணிநேரம் கழிவறையில் போராட வேண்டியிருந்தது. அதுவும், ஒவ்வொரு நாளும் 7, 8 முறை. என் உடலிலிருந்து அதிகளவில் ஊட்டச்சத்துக்களும், ரத்தமும் குறைந்துகொண்டே போக, எனது ஹீமோகுளோபின் அளவும் குறைந்துகொண்டே போனது. அவை எனது வாழ்வின் கடைசி நாட்கள் என்றே நினைத்துக்கொண்டேன். ஆனால், நான் பிழைத்துவிட்டேன். என் உடலிலிருந்து எல்லா சக்தியையும் இழந்து, ஒரு தாவர நிலையில் தான் வாழ்ந்துகொண்டிருந்தேன்" என்கிறார்.

"எதனால் என் உடல்நிலை இப்படியானது என எனக்கு தெரியவில்லை. என் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், வெளியே உணவருந்துவதையே மொத்தமாக நிறுத்துவிட்டேன்; அது எனது சமூக வாழ்க்கையை பாதித்தது. வெளியே எங்கும் செல்லாமல் எனக்கு பிரியமானவர்களை சந்திக்க முடியாததால், அதீத மன அழுத்தமும் ஏற்பட்டது. பல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுனர்களை சந்தித்தும் கூட, அவர்கள் யாராலும் எனக்கு சரியான தீர்வை அளிக்க முடியவில்லை. தொடர்ந்து நிறைய மருந்துகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டிருந்ததால், அது என் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது" என்றார்.

நிடாஷாவின் இந்த நிலைக்கு என்ன காரணம் என யாராலும் கண்டறிய முடியாததால், அவரை குணப்படுத்துவதும் சாத்தியமில்லாமல் இருந்தது. நிடாஷாவை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், சில அடிப்படை உணவு முறை மாற்றங்களைக் கொண்டு அவரது வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும் என கண்டறிந்தார் டெல்லியை சேர்ந்த மோனிஷா அசோகன் எனும் ஊட்டச்சத்து நிபுணர். இந்த உணவு முறை மாற்றங்களை பின்பற்றுவது சுலபமில்லை என்றாலும் கூட, தொடர்ச்சியான உணவு மாற்றம், மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகள் மூலம் தனது பெருங்குடல் புண் மற்றும் வீக்கங்களில் இருந்து மீண்டு வந்தார் நிடாஷா.


பெருங்குடல் புண் வருவதற்கான சில அறிகுறிகள்:

வயிற்றின் வீக்கத்தைப் பொறுத்து, பெருங்குடல் புண் வருவதற்கான அறிகுறிகள் மாறலாம். அவற்றில் சில இதோ:

- இரத்தப்போக்கு (இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு)

- அடிவயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு

- மலச்சிக்கல் வலி

- மலக்குடல் இரத்தப்போக்கு

- இரத்த இழப்பு காரணமாக சோர்வு மற்றும் இரத்த சோகை

கிரோன் நோய் எனப்படும் ஒருவித குடல் அழற்சி நோய் மூலம் வாய் முதல் ஆசனவாய் வரை எங்கு வேண்டுமானாலும் வீக்கம் ஏற்படக்கூடும். இந்த நோயால் குடல் சுவர்களின் அனைத்து அடுக்குகளும் பாதிப்படைகிறது.

இந்த நோய்களை தடுக்க, பின்வரும் உணவுப்பொருட்களை அதிக அளவில் உண்பதை தவிர்ப்பது நல்லது

- மசாலா பொருட்கள்

- பருப்பு வகைகள்

- சோளம் / பாப்கார்ன்

- பால் உணவு வகைகள்

- மது

- புகைபிடித்தல்

- கோதுமை, ஓட்ஸ், கம்பு போன்ற முழு தானியங்கள்

- அதிக ஃபைபர் கொண்ட பழங்கள்

- அதிக ஃபைபர் கொண்ட காய்கறிகள்

மன அழுத்தத்திற்கும், பெருங்குடல் புண் ஏற்படுவதற்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது. மன அழுத்தம், கவலை மற்றும் பதட்டத்தினால், பெருங்குடல் புண் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. ஆழ்ந்த சுவாசம், யோகா, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கத்தின் உதவியோடு, உங்களை நீங்களே சாந்தப்படுத்த முயற்சியுங்கள்.

உணவு மாற்றம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதை அறியாமலே தவித்துக்கொண்டிருக்கும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com