முகப்பு »  நலவாழ்வு »  குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்!!

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்!!

முழுதானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்!!

சிறப்பம்சங்கள்

  1. குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அத்யாவசியம்.
  2. வளரும் குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
  3. தினசரி குழந்தைகள் வியர்வை வெளியேற விளையாடுவது அவசியம்.

குழந்தைகள் எப்போது புதுபுது விஷயங்களை நாளுக்கு நாள் கற்றுக் கொள்ள ஆவலுடன் இருப்பார்கள்.  அவர்களின் மூளை வளர்ச்சி சீராக இருந்தால் மட்டுமே அவர்களின் கவனம், செயல்பாடு, கற்றல் போன்றவையும் சீராக இருக்கும்.  மூளையின் செயல்திறனை அதிகரித்து, ஆரோக்கியத்துடன் இருக்க சில உணவுகளை தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு கொடுப்பது அவசியம்.  மூளையின் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய 6 உணவுகளை பார்ப்போம்.  

முட்டை: 
முட்டையில் புரதம் அதிகமாக இருக்கிறது.  தினசரி காலை உணவில் முட்டை இருப்பது அவசியம்.  காலை உணவாக முட்டையை கொடுப்பதால் குழந்தைகள் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும்.  முட்டையை அவர்களுக்கு பிடித்தவாறு ருசியாக செய்து கொடுக்கலாம்.  

mtdtnf6

 

நட்ஸ்: 
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் திறன் பாதாமில் உள்ளது.  குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.  நட்ஸில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்திருக்கிறது.  தினமும் பாதாமை தண்ணீரில் ஊற வைத்து, காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.  இது ஞாபகத்திறனை அதிகரிக்கும்.  

ஓட்ஸ்: 
ஓட்ஸில் வைட்டமின் ஈ, சிங்க், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி காப்ளக்ஸ் போன்றவை இருக்கிறது.  இது மூளை செயல்பாட்டை அதிகரிப்பதோடு, செரிமானத்தையும் சீராக்குகிறது.  காலை நேரத்தில் ஓட்ஸ் மற்றும் செரல்ஸ் சேர்த்து சாப்பிடுவதால் ஞாபகத்திறன் அதிகரிக்கும்.  

முழு தானியங்கள்: 
முழுதானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  மூளை வளர்ச்சிக்கு இந்த உணவு பெரிதும் உதவும்.  

qmvb3fug

 

பால்: 
தினமும் குழந்தைகளை பால் குடிக்க வைப்பது கட்டாயமானது.  இதனால் எலும்புகள், பற்கள் மற்றும் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.  

யோகர்ட்: 
யோகர்ட்டில் புரதம் நிறைந்துள்ளது.  தினமும் குழந்தைகளுக்கு யோகர்ட் கொடுக்கலாம்.  இது நாள் முழுக்க குழந்தைகளை புத்துணர்வுடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------