முகப்பு »  நலவாழ்வு »  வயிறு உப்புசத்தை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

வயிறு உப்புசத்தை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் தன்மை கொண்டது.  நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை போக்க இதனை சாப்பிடலாம். 

வயிறு உப்புசத்தை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. இதில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.
  2. உடலில் கலோரிகளை குறைக்க இதனை சாப்பிடலாம்.
  3. உடலில் ஆற்றலை அதிகரிக்க இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

பஞ்சாப், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் கடலைப் பருப்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.  கடலைப்பருப்பில் புரதம் நிறைந்திருக்கிறது என்பதல் அதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.  கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, அதில் சீரகத்தூள், கொத்தமல்லி மற்றும் மிளகாய் சேர்த்து குடிக்கலாம்.  இந்த பானம் உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.  மேலும் இந்த பானத்தில் சில நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

உடல் எடை: 
உடல் எடை குறைக்க புரதம் மிகவும் அவசியமானது.  புரதம் நாள் முழுக்க உங்களை நிறைவாக வைத்திருப்பதோடு, தசைகளையும் உறுதியாக்குகிறது.  இந்த கடலைப்பருப்பு சாப்பிடுவதால் வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.  மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை குறைக்க பயன்படுகிறது.  
 

okr2430o

செரிமானம்: 
வெறும் வயிற்றில் இந்த கடலைப்பருப்பை சாப்பிடுவதால் வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.  உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் தன்மை கொண்டது.  நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை போக்க இதனை சாப்பிடலாம். 

ஆற்றல்: 
கடலைப்பருப்பில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது.  இதன் விளைவாக உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைத்து இரத்தத்தில் சிவப்பணுக்கள் பெருகும்.  நாள் முழுக்க நீங்கள் ஆற்றலுடன் இருக்க இதனை சாப்பிடலாம். 

s67c21q

நீரிழிவு நோய்: 
கடலைப்பருப்பில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு.  ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய இந்த உணவை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.  அடிக்கடி இதனை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.  

எப்படி தயாரிப்பது?
இந்த சர்பத் தயாரிக்க கடலைப்பருப்பு, வெல்லம், குளிர்ச்சியான தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.  இந்த மாவை கொண்டு லட்டு தயாரிக்கலாம்.  கடலைப்பருப்பு மாவில் தேன் மற்றும் நெய் சேர்த்து லட்டு போல் உருட்டி சாப்பிடலாம்.  உடல் எடை குறைக்க இதனை சாப்பிட்டு வரலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------