முகப்பு »  நலவாழ்வு »  குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு எந்த பாலை கொடுக்க வேண்டும் : ஊட்டச்சத்து நிபுணரின் பதில்

குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு எந்த பாலை கொடுக்க வேண்டும் : ஊட்டச்சத்து நிபுணரின் பதில்

குடல் புற்றுநோயை வராமல் தடுப்பதிலும் மூளை வளர்ச்சிக்கும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு எந்த பாலை கொடுக்க வேண்டும் : ஊட்டச்சத்து நிபுணரின் பதில்

லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் பிற பால்களை எடுத்துக் கொள்ளலாம். பாதாம் பால், சோயா பால் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

  1. பால் பொருட்களில் கால்சியம் அதிகளவு உள்ளது.
  2. குழந்தைகளுக்கு போதுமான அளவு கால்சியம் இல்லையெனில் வளர்ச்சி பாதிக்கப்படும்
  3. பாலில் 9 ஊட்டச்சத்துகள் உள்ளன

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஷெல்ப் நிறைய விதவிதமான பால் பாக்கெட்டுகள் இருப்பதை பார்க்க முடியும். எதை தேர்வு செய்யலாம் என்பதில் குழப்பமாக இருக்கும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் முழு கொழுப்பு சத்தும் உள்ள பாலினை வாங்கலாம். ஆனால் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வயதில் இருக்கும் போது எந்த பாலை வாங்க வேண்டும் என்பதில் குழப்பம் வரவே செய்யும். இதற்கு தீர்வை கொடுக்க ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் பாலை தேர்வு செய்ய உதவியுள்ளோம். 

ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து 

பால் பொருட்கள் உடலுக்கு தேவையான கால்சிய சத்தினை கொடுப்பதில் முக்கிய அங்கமாக உள்ளது. ஆரோக்கியமான எலும்பு, புரதச்சத்து, சதை வளர்ச்சி விட்டமின் ஏ,பி, மற்றும் விட்டமின் டி ஆகியவை உள்ளது. பால் பாஸ்பரஸ் சத்தினையும் கொடுக்கிறது. உடலில் பாஸ்பரஸ் போதுமான அளவில் இருக்க வேண்டியது அவசியம். அதுதான் ஜின்க், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய  ஊட்டச்சத்துகளை உடலில் தக்க வைக்க உதவுகிறது. பாஸ்பரஸ் மனித உடலின் தசையில் கால்சியம் சத்தினை வைத்திருக்க உதவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆரோக்கியமான உணவின் அங்கமாக பால், பால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே, உங்கள் குடும்பத்தில் வயது வேறுபாடு, டயட் முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாலினை சேர்த்துக் கொள்ளலாம். பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால்  பாலினை தேர்வுசெய்வதில் கூடுதல் தெளிவு ஏற்படும். 


1. எலும்பு அடர்த்தியை பாரமரிக்கவும், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இரத்தம் உரைதலை தடுக்கவும் உதவுகிறது. 

2. பாலில் உள்ள சோடியத்தின் விகிதம் சுரப்பிகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

3. தசை செயல்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. 

4. பல் மற்றும் எலும்பின் உறுதி தன்மைக்கு மிகவும் உதவுகிறது. 

5. குடல் புற்றுநோயை வராமல் தடுப்பதிலும் மூளை வளர்ச்சிக்கும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

குழந்தைகளுக்கு

தாய்மார்களுக்கு குழந்தைகள் குறித்தான ஆரோக்கிய கவலைகளில் ஒன்று பால் உணவு பொருட்கள். வளரும் காலத்தில் குழந்தைகளுக்கு போதிய கால்சியம் சத்து இல்லையென்றால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுவதைப் பார்க்கலாம். குழந்தைகளின் ஊட்டச்சத்து பட்டியலில் நிச்சயமாக பால் தேவைப்படுகிறது. 

வயது வந்தோர்க்கு

ஆரோக்கியமான வளர்ச்சி ஆண்டுகளுக்குப் பிறகு, வயதான காலத்தில், அலர்ஜி, அதிகக் கொழுப்பு, நீரிழிவும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பால் பொருட்களில் எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நிர்வகிக்க சிறந்த முறையில் உணவு கட்டுபாட்டை பின்பற்றவேண்டியது மிகவும் அவசியம். வயதானவர்கள் ஸ்கிம்டு பால் மற்றும் க்ரீமை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  

லாக்டோஸ் அலர்ஜி என்பது பாலில் உள்ள சர்க்கரை (லாக்டோஸை) செரிக்க முடியாமல் வயிறு வீக்கம் ஏற்படும் நிலையாகும். லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் பிற பால்களை எடுத்துக் கொள்ளலாம். பாதாம் பால்,  சோயா பால் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். 

(Nmami Agarwal is nutritionist at Nmami Life)

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com