முகப்பு »  நலவாழ்வு »  மன அழுத்தத்தால் கூட உடல் பருமன் கூடும்... உஷார் மக்களே!

மன அழுத்தத்தால் கூட உடல் பருமன் கூடும்... உஷார் மக்களே!

நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த வந்தால், உடல்பருமன் ஏற்படும், கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளும் ஏற்படும், இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது

மன அழுத்தத்தால் கூட உடல் பருமன் கூடும்... உஷார் மக்களே!

மன அழுத்ததால் ஏற்படும் பாதிப்புகள்

சிறப்பம்சங்கள்

  1. பல விதமான ஆரோக்கிய சீர்கேடை ஏற்படுத்தும்
  2. மன அழுத்தத்தால் உடலும் மனமும் கெட்டு விடுகிறது
  3. ஹார்மோன் சீர்குலைவு ஏற்படும்

நீண்ட நாள் மன அழுத்தம் என்பது  நீங்கள் நினைப்பதை விட ஆரோக்கியத்திற்குத் தீங்கானது. இது கார்டிசோல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கார்டிசோல் கொழுப்புகள் மற்றும் கார்ப்ஸின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. அது இன்சுலினை வெளியேற்றி, இரத்தத்தில் சர்க்கரை அளவை தூண்டுகிறது. 

இவை அனைத்தும் பசியின்மை மற்றும் உடல் பருமனுக்கு காரணமாகின்றன. உடல் பருமன் மட்டுமல்ல, கவலை, மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை சரிசெய்ய மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை எப்படி சரிசெய்யலாம் என்பது பற்றி வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் கோடின்ஹோ சில வழிகளை வழங்குகிறார்.

அதிக மன அழுத்தமானது பலருக்கும் பல விதமான  ஆரோக்கிய சீர்கேடை ஏற்படுத்தும். சிலருக்கு உடல் ஒல்லியாக மாறுதல், சிலருக்கு உடல் பருமன் ஏற்படுதல், நீரிழிவு நோய் அல்லது தைராய்டு பிரச்சினைகள் இவை அனைத்தும் ஹார்மோன்களின் சமநிலை ஆகியவற்றை சீர்குலைக்கும்.


1. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை சீர்குலைத்து உங்கள் உடலையே சிதைத்து விடும் என்று கோடின்ஹோ கூறுகிறார்

2. பலர் மன அழுத்தத்தில் இருக்கும் போது வாயு, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் கண்டிருப்பார்கள். அதற்கு காரணம் இதுவே ஆகும்.

3. நீண்ட நாள் மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உங்கள் தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கும். தூக்கமின்மையால் கிரெலின் அளவு அதிகரிக்கலாம் (பசியின்மை அதிகரிக்கும்). இதனால் எடை அதிகரிப்பதற்கும் பங்களிக்கும்.

hcumtsn

மன அழுத்தத்தால் சரியான தூக்கமின்மையும் ஏற்படும்
Photo Credit: iStock

4. ஓய்வில்லாமல் அதிகப்படியான வேலைகளைச் செய்யும் போதும் மன அழுத்தம் ஏற்படும். அதிகப்படியான  உடல் உழைப்பால் உங்கள் நரம்பு மண்டலம் சோர்ந்து விடும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு மேலும் வழிவகுக்கிறது.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

5. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட மன அழுத்தத்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்துக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம் மோசமானது என்பது இதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும். மன அழுத்தம் ஏற்பட்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் மன அழுத்தம் ஏற்படும் என்று தெரிந்த பிறகும், சம்பந்தப்பட்ட காரியத்தை, செயலை எதிர்கொள்ள வேண்டாம். பல வாரங்களாக நீங்கள் மன அழுத்தத்துடனும், சோகத்துடனும் இருந்தால், நம்பிக்கையற்ற தன்மை, உதவியற்ற தன்மை மற்றும் பயனற்ற தன்மை போன்ற உணர்வுகள் ஏற்பட்டுவிடும். எனவே, கவலைகள் ஏற்படாதவாறு நம்மைநாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் இடர் ஏற்பட்டால் கூட, அதை நினைத்து வருந்தாமல், முன்னேறிச் செல்ல வேண்டும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------