முகப்பு »  நலவாழ்வு »  காய்ச்சல் பாதிப்பா? தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான உணவு வழிகாட்டி

காய்ச்சல் பாதிப்பா? தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான உணவு வழிகாட்டி

காய்ச்சலின் போது எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை விடவும், தவிர்க்க வேண்டிய சில உணவுகளை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

காய்ச்சல் பாதிப்பா? தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான உணவு வழிகாட்டி

காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போது, கவனமாக இருப்பது அவசியமாகும். உடல் பாதிப்பை சரி செய்ய, ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது மிக முக்கியமாகும். குறிப்பாக, புரதச்சத்து, வைட்டமின் ஏ,சி,இ, டி, பி6, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

59rdi6q8

காயச்சலின் போது பின்பற்ற வேண்டியவை

  1. காய்ச்சலின் போது புரதச்சத்து நிறைந்த முட்டை, தயிர், பன்னீர், சீஸ், பருப்பு வகைகள், எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு இருந்தால், பால் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்
  2. ப்ரோபயோடிக்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும். தயிர் சேர்த்துக் கொள்ளவும்
  3. நார்ச்சத்து அதிகம் நிறைந்த கிச்சடி, ரவை உப்மா, இட்லி ஆகியவை தவிர்க்கவும்
  4. வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழ வகைகளை சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும் போது, பழங்களின் தோலை உறித்து சாப்பிடவும்
  5. பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். சூப், வேகவைத்த காய்கறிகளை சாப்பிடவும்
  6. காய்கறி சூப், எலுமிச்சை ஜூஸ், சிக்கன் சூப், மூலிகை டீ, மோர் ஆகியவற்றை பருகலாம். உடலுக்கு தேவையான மினரல்கள் இந்த பானங்களில் உள்ளன
  7. எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய கொழுப்புகளான வெண்ணெய், முட்டை எடுத்துக் கொள்ளலாம்
  8. உடல் ஜீரணத்தை சீராக வைக்க உதவும் உணவுகளை சாப்பிட வேண்டும்
  9. சரியான அளவு உணவுகளை, உடற்பசிக்கு தேவையான அளவு ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்
  10. காய்ச்சல் தீவிரமானால், மருத்துவரை அனுகவும். மருத்துவரின் பரிந்துரைப்படி உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
bchi53hg

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------