முகப்பு »  நலவாழ்வு »  கொரோனா காலத்தில் காருக்குள் மாஸ்க் அணிய வேண்டுமா? நிபுணர்கள் கூறுவதென்ன..?

கொரோனா காலத்தில் காருக்குள் மாஸ்க் அணிய வேண்டுமா? நிபுணர்கள் கூறுவதென்ன..?

காருக்குள் இருக்கும் போது மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா என்பது பற்றி இங்குக் காணலாம்

கொரோனா காலத்தில் காருக்குள் மாஸ்க் அணிய வேண்டுமா? நிபுணர்கள் கூறுவதென்ன..?

COVID-19 நோய்த்தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கெள்ள மாஸ்க் அணியவும்

சிறப்பம்சங்கள்

  1. You may not wear a mask if you are alone in the car
  2. Wear a mask if you are sick and there's someone with you in the car
  3. Wear a mask there's someone not residing with you, in the car

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு யாரும் தேவையின்றி வெளியே சுற்றக்கூடாது, வெளியே சென்றால் மாஸ்க் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிலருக்கு ஒரு குழப்பம் ஏற்படலாம். வெளியே பொதுமக்கள் நிறைந்த பகுதியில் செல்லும் போது மாஸ்க் அணியலாம். ஆனால், காரில் செல்லும் போது, பைக்கில் செல்லும் போது கூடவா மாஸ்க் அணிய வேண்டும்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

இதுகுறித்து நுரையீரலியல் நிபுணர் கன்வார் கூறுகையில், நீங்கள் மட்டும் காருக்குள் இருக்கிறீர்கள் என்றால் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. அதுவே காருக்குள் வேறு யாராவது அமர்ந்திருந்தால், மாஸக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முன் சீட்டில்தானே அமர்ந்திருக்கிறோம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. 

அதே நேரத்தில் மாஸ்க் அணிவதாக இருந்தால், சரியான முறையில் அணிய வேண்டும். மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடும்படி இருக்க வேண்டும். மூக்கிற்கு மேல் கண் அருகில் மாஸ்க் செல்லக்கூடாது. 

நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள் என்பதால், உங்கள் பார்வை சரியாகத் தெரியும் வகையில் மாஸ்க் அணிய வேண்டும். கண் அருகே மாஸ்க் இருந்தால், சில நேரங்களில் உங்கள் கண் மறைத்துவிடும். கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது இவ்வாறு கண் மறைத்து விட்டால் விபரீதமாகிவிடும். எனவே, மாஸ்க் அணியும் போது, கண்ணுக்கு கீழே மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மட்டும் முழுமையாக மூடும் வகையில் அணிய வேண்டும்' இவ்வாறு நுரையீரலியல்  நிபுணர் கன்வார் கூறுகிறார்.

rg1dtqag

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணியவும்
Photo Credit: iStock


சில முக்கிய குறிப்புகள்:


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
  • முடிந்த வரையில் கொரோனாவுக்கான N95 ரக மாஸ்க்கை பயன்படுத்தவும். 
  • வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே காரில் இருந்தால் மாஸ்க் அணியத் தேவையில்லை.
  • உங்களுக்கு உடல்நிலை சரியில்லை, அதே நேரத்தில் உங்கள் குடும்பத்தார் காரில் உள்ளனர் என்றால் கண்டிப்பாக மாஸ்க் அணியவும்
  • கேப், டாக்ஸியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும்
  • காரை விட்டு இறங்கும் முன்பு மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்த பிறகுதான் காரை விட்டு வெளியேற வேண்டும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------