முகப்பு »  நலவாழ்வு »  கை ஜில்லென இருப்பதற்கு என்ன காரணம்? அதை கதகதப்பாக வைத்து கொள்வது எப்படி?

கை ஜில்லென இருப்பதற்கு என்ன காரணம்? அதை கதகதப்பாக வைத்து கொள்வது எப்படி?

குளிர் காலத்தில் எல்லோருக்குமே கை ஜில்லித்துவிடும். அதற்கு வைட்டமின் பி12 குறைப்பாடே காரணம். குளிர் காலம் மட்டுமில்லாமல் எல்லா சீசனிலும் உங்கள் கை ஜில்லென்று இருந்தால் அனிமியாவாக இருக்கலாம்

கை ஜில்லென இருப்பதற்கு என்ன காரணம்? அதை கதகதப்பாக வைத்து கொள்வது எப்படி?

குளிர் காலத்தில் எல்லோருக்குமே கை ஜில்லித்துவிடும். அதற்கு வைட்டமின் பி12 குறைப்பாடே காரணம். குளிர் காலம் மட்டுமில்லாமல் எல்லா சீசனிலும் உங்கள் கை ஜில்லென்று இருந்தால் அனிமியாவாக இருக்கலாம்.

கை ஜில்லென இருப்பதற்கு எழு காரணங்கள்-

அனிமியா-


உடலில் ஹிமோகோளோபின் அளவு குறைந்தால் கைக்கள் ஜில்லென ஆகிவிடும். இரும்பு சத்து குறைப்பாடும் ஒரு காரணம். இதற்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை அதிகம் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

குளிர் காலம்-

குளிர்காலத்தில் காற்றின் வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதனால் இயல்பாகவே கைக்கள் ஜில்லென ஆகிவிடும். இது தொடர்ந்து இருந்தால்சதை, சருமம் எல்லாம் சிதைத்து கையில் ரத்த ஓட்டதையே குறைத்துவிடும்.

ரேனாட் குறைப்பாடு-

உடலில் சில உறுப்புகள் குறிப்பாக விரல்கள் மட்டும் ஜில்லித்து போவதை ரேனாட் குறைப்பாடு என்பார்கள்: இது முதலில் இதயத்தை தாக்கி அங்கிருந்து உறுப்புகளுக்கு ரத்த சீராக பாய்ச்சாமல் செய்துவிடும். இதற்கு அருகில் உள்ள மருத்துவரைச் சந்தித்து பேசுவதவே தீர்வு.

வைட்டமின் பி12 குறைப்பாடு-

வைட்டமின் பி12 குறைப்பாடு இருந்தால் எந்நேரம் கைக்கள் ஜில்லென்றே இருக்கும். இது நரம்புகளை பாதிப்படைய செய்யும். வைட்டமின் பி12 அதிகம் இருக்கும் முட்டை, பால் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் இந்த உபாதையில் இருந்து மீளலாம்.

லுப்புஸ்-
உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியாலே ஏற்படும் இந்த வகை உபாதையும் கைக்களை ஜில்லென ஆகிவிடும். இது கைக்கள் மட்டுமல்லாது கல்லீரல், சருமம், ரத்த அனுக்கள், மூட்டு ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தைராய்டு-

தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு கைக்கள் அடிக்கடி ஜில்லென ஆகிடுவிகிறது. இது உடல் எடை கூட்டும். முடி கொட்டும், மன அழுத்தம், மலட்டு தன்மை ஆகியவற்றை தரும்.

புகைப்பிடித்தல்-

புகைப்பிடித்தால் உடலில் ரத்த ஒட்டம் பாதிப்படைந்து கைக்கள் ஜில்லென ஆக வழிவகுத்துவிடும்.

qclambqg

 

இதிலிருந்து எப்படி மீளலாம்-

உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஒட்டம் சீராக இருக்கும்.
கைக்களை கதகதப்பான இடங்களில் வைத்தால் பலன் கிடைக்கும்
விரல்களை மடக்கியே வைத்துயிருக்க வேண்டும்.
கையுறை அணிந்து கொள்வது நல்ல பலனைத் தரும்
வெந்நீரில் கொஞ்சம் கை வைத்து கொண்டால் கைக்களுக்கு நல்லது
சூடான தேநீர் கோப்பை கையில் பிடித்து கொண்டால் கைக்களுக்கு குளிரில் நல்ல அடைக்கலம் கிடைக்கும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------