முகப்பு »  நலவாழ்வு »  கேரளாவின் வெள்ள சேதங்களுக்கிடையே, அதிகரித்து வரும் தொற்றுநோய் அபாயங்கள்!

கேரளாவின் வெள்ள சேதங்களுக்கிடையே, அதிகரித்து வரும் தொற்றுநோய் அபாயங்கள்!

போர்க்கால அடிப்படையில், சுகாதார மற்றும் நலன் அமைச்சகம் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது

கேரளாவின் வெள்ள சேதங்களுக்கிடையே, அதிகரித்து வரும் தொற்றுநோய் அபாயங்கள்!

மோசமான வெள்ளப் பேரழிவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் கேரள மாநிலம், தொற்றுநோய் எனும் புதிய ஆபத்தையும் சந்திக்கவிருக்கிறது.

வெள்ள நீரை வெளியேற்றும் அதே நேரத்தில், கேரள மக்கள் நீர்வழி நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் பரவும் நோய்களான காலரா, டைபாய்டு, மலேரியா, ஹெபடைடிஸ் மற்றும் பிற காய்ச்சல்களை சமாளிக்க தயாராக வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

"பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் நிவாரண முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அங்கு எல்லோரும் சுத்தமாகவோ சுகாதாரமாகவோ இருப்பது கடினமான விஷயம் என்பதால் டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ ஆகிய நோய்களினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என சொல்கிறார் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் அசோக் க்ரோவர்.


கேரள சுகாதார சேவைகள் இயக்ககம் அளித்துள்ள தகவலின்படி, கேரளா மாநிலத்தில் ஏற்கனவே 846 டெங்கு காய்ச்சல் நோயாளிகள், கடுமையான வயிற்றுப்போக்கிற்கு உள்ளான 1,91,945 நோயாளிகள், 518 மலேரியா நோயாளிகள், 34 சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

"கொசு மற்றும் நோய் பரப்பும் பிற பூச்சிகளுக்கு, தேங்கி நிற்கும் நீரே உறைவிடம் ஆகும். நிவாரண முகாம்களில்

மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு அதிக நேரம் ஆவதில்லை" என்கிறார் ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் கூடுதல் இயக்குநரான அமிதாப் பார்டி. இந்த சுகாதாரமற்ற சூழலில் தோல் சம்பதப்பட்ட நோய்களும், காது-மூக்கு-தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். காய்ச்சல், குளிர் ஜுரம், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான நீரிழிவு மற்றும் சோர்வு ஆகியவையே நீர்வழி நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் பரவும் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

மருத்துவ சோதனைகளுக்குப் பிறகே, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

போர்க்கால அடிப்படையில், சுகாதார மற்றும் நலன் அமைச்சகம் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கேரளாவில் இதுவரை 3,757 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தொற்று நோய்கள் குறித்த சுகாதார ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், 90 வகையான மருந்துகளின் முதல் அடுக்கை அனுப்பியுள்ளது சுகாதார அமைச்சகம்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------