முகப்பு »  நலவாழ்வு »  கர்ப்ப காலத்திற்கு பின் ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன??

கர்ப்ப காலத்திற்கு பின் ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன??

ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் அளவு உடலில் மாறுபடும்போது இந்த மெலஸ்மா என்னும் சரும பாதிப்பு ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்திற்கு பின் ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன??

சிறப்பம்சங்கள்

  1. கர்ப்ப காலத்திற்கு பிறகு சில சரும நோய்கள் தானாகவே குணமாகும்.
  2. சூரிய ஒளியின் காரணமாகவும் சில கடுமையான சரும பாதிப்புகள் ஏற்படும்.
  3. தினமும் சருமத்தை இயற்கை பொருட்கள் கொண்டு பராமரிக்கலாம்.

கர்ப்ப காலத்தின்போது உடல் மற்றும் மன அமைப்பு மாறுபடும்.  மிக முக்கியமாக கர்ப்ப காலத்திற்கு பிறகு சருமம் முற்றிலும் மாறுபடும்.  ஹார்மோன், நோய் எதிர்ப்பு சக்தி, மெட்டபாலிசம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றத்தால் பெண்களுக்கு சரும பாதிப்புகள் ஏற்படும்.  கர்ப்ப காலத்திற்கு பிறகும் சருமத்தை பொலிவாக வைத்திட பெண்கள் நிச்சயம் மெனக்கெட வேண்டும்.  கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில சரும பிரச்சனைகளை குறித்து பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

மெலஸ்மா: 
ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் அளவு உடலில் மாறுபடும்போது இந்த மெலஸ்மா என்னும் சரும பாதிப்பு ஏற்படுகிறது.  வாய், கண்ணம், நெற்றி, கண் ஆகியவற்றை சுற்றி கருமை நிறம் படர்ந்துவிடும்.  சூரிய ஒளியால் இந்த சரும பாதிப்பு இன்னும் கடுமையாகிவிடும்.  அதனால் கர்ப்ப காலத்தின் போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லது.  

acne

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

ஸ்பைடர் வெயின்: 
உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் என்பதால், முகத்தில் ஸ்பைடர் வெயின் தோன்றும்.  மகப்பேறுக்கு பின் தான் இதுபோன்ற சரும பாதிப்புகள் ஏற்படும்.  

சரும வறட்சி: 
கர்ப்ப காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படும்.  இதனால் சரும வறட்சி ஏற்படும்.  தொடர்ச்சியாக இளநீர் குடித்து வந்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------