முகப்பு »  நலவாழ்வு »  லாக்டவுன் சமயத்தில் தூக்கமின்மை பிரச்னையா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

லாக்டவுன் சமயத்தில் தூக்கமின்மை பிரச்னையா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்பள் மஞ்சள் கலந்த பால் அருந்தும் படி அறிவுறுத்துகிறார், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இது உங்களுக்கு நன்றாகத் தூங்க உதவும், மேலும் உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

லாக்டவுன் சமயத்தில் தூக்கமின்மை பிரச்னையா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

குறைக்கப்பட்ட உடல் செயல்பாடு இரவில் தூக்கத்தை பாதிக்கலாம்

சிறப்பம்சங்கள்

  1. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த ஆல்கஹால் உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள்
  2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
  3. தூங்கும் நேரம் மற்றும் எழும் நேரத்தை சரியாக திட்டமிடுங்கள்

கோவிட்-19, லாக்டவுன் மற்றும் இந்த கொடிய தொற்றுநோய் தாக்கும் என்ற பயம் அல்லது நேசிப்பவரை இழக்க நேரிடும் என்ற அச்சம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அட்டவணை மற்றும் தினசரி வழக்கத்தில் மாற்றம் மற்றும் தினசரி உடல் செயல்பாடுகளில் குறைப்பு ஆகியவை உங்களுக்குச் சரியான தூக்கத்தைக் கொடுப்பது கடினமாக இருக்கும். தூக்கமின்மையால் எடை அதிகரிப்பு, சோர்வு, பசி அதிகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில், இரவில் நன்றாகத் தூங்க உதவும் சில உதவிக்குறிப்புகளைப் பற்றி நாங்கள் பேசப்போகிறோம்.

1. இரவில் மஞ்சள் கலந்த பால்

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்பள் மஞ்சள் கலந்த பால் அருந்தும் படி அறிவுறுத்துகிறார், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இது உங்களுக்கு நன்றாகத் தூங்க உதவும், மேலும் உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மஞ்சளின் மருத்துவ பண்புகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.


2. உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி எண்டோர்பின்கள் அல்லது மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது. மேலும் என்னவென்றால், இது உங்கள் உடலைச் செயல்படுத்துகிறது மற்றும் உங்களுக்குச் சாதனை உணர்வை வழங்குகிறது. தினமும் அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும்.

3. கேட்ஜெட்டுகள் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும்

படுக்கை நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தொலைப்பேசி, டிவி, டேப்லெட் அல்லது வேறு எந்த கேட்ஜெட்டையும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று திவேகர் பரிந்துரைக்கிறார். நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது தூங்கச் செல்வதற்கு முன்பு மியூசிக் கேட்கலாம்.

kq5m4hj8

4. எதிர்மறை மீடியாவில் இருந்து விலகியிருக்கவும்

நீங்கள் எத்தனை முறை செய்திகளைப் பார்க்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். செய்தி புதுப்பிப்புகளுக்காக உங்கள் தொலைப்பேசியை எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்கவும். படுக்கைக்கு முன் செய்திகளைப் படிப்பதை அல்லது பார்ப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் கவலையை அதிகரிக்கும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

5. தூங்கும்/ எழும் நேரத்தைத் தீர்மானிக்கவும்

உங்கள் தூக்க வழக்கத்தை முறைப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். எழும் மற்றும் படுக்கைக்குச் செல்லும் நேரத்தைச் சரிசெய்து ஒழுக்கத்துடன் அதைப் பின்பற்றுங்கள். தாமதிக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டாம். இது உங்கள் வழக்கத்தை ஒழுங்கமைக்கவும் நல்ல தூக்கத்தை மீட்டெடுக்கவும் உதவும். பிற்பகலில் நீண்ட நேரம் தூங்குவதைத் தவிர்க்கவும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------