முகப்பு »  நலவாழ்வு »  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்!!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்!!

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.  இதில் குர்குமின் என்னும் பொருள் இருப்பதால் இது இயற்கையான ஆண்டிபையாடிக்காக பார்க்கப்படுகிறது. 

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்!!

சிறப்பம்சங்கள்

  1. பூண்டில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.
  2. மஞ்சள் ஆண்டிபையாடிக் தன்மை கொண்டது.
  3. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேன் சாப்பிடலாம்.

பாக்டீரியா நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க ஆண்டிபையாடிக்ஸ் மிகவும் முக்கியமானது.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையாகவே ஆண்டிபையாடிக் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடலாம்.  உடலில் அதிகபடியான பாக்டீரியா தொற்று காரணமாகவே நோய்கள் தோன்றுகிறது.  உதாரணமாக, சளி, காய்ச்சல், சைனஸ், நிமோனியா போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதை தவிர்க்க ஆண்டிபையாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.  ஆண்டிபையாடிக் நிறைந்த சில உணவுகளை பார்ப்போம். 

தேன்:

தேனில் நோயை குணமாக்கும் தன்மை இருக்கிறது.  காயங்கள் மற்றும் கிருமி தொற்றுகளை விரைவில் குணப்படுத்தக்கூடிய தன்மை இருக்கிறது.  சர்க்கரைக்கு பதிலாக தேனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.  தேநீர் மற்றும் பால் போன்றவற்றில் தேன் கலந்து குடிக்கலாம். 


பூண்டு:

கிருமி தொற்றை எதிர்த்து போராடும் தன்மை பூண்டில் இருக்கிறது.  ஆண்டிபாக்டீரியல் தன்மை கொண்டது பூண்டு.  பூண்டில் அலிசின் என்னும் பொருள் இருப்பதால் பாக்டீரியா தொற்றை தடுக்கிறது.  ஆலிவ் எண்ணெயில் பூண்டை ஊறவைத்து இரண்டிரண்டாக சாப்பிட்டு வரலாம். 

h1ispn9g

 

இஞ்சி:

இஞ்சியில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  இது இயற்கை ஆண்டிபையாடிக்கும் கூட.  இஞ்சியில் ஜிஞ்சரால் என்னும் மருத்துவ குணம் இருப்பதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றிற்கு சிறந்தது.  தசைகளில் ஏற்படக்கூடிய வலி மற்றும் சோர்வை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.  இஞ்சி மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். 

தைம்:

தைம் எசன்ஷியல் எண்ணெயை வீட்டில் பயன்படுத்தலாம்.  இது ஆண்டிபையாடிக் தாக்கத்தை அதிகரிக்கும்.  இதனால் வீடுகளில் பாக்டீரிய தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். 

மஞ்சள்:

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.  இதில் குர்குமின் என்னும் பொருள் இருப்பதால் இது இயற்கையான ஆண்டிபையாடிக்காக பார்க்கப்படுகிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  மூளை செயல்பாட்டை அதிகரித்து, ஆர்த்திரிடிஸ் மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது.  பாலில் மஞ்சள் சேர்த்து தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களில் அபாயத்தில் இருந்து தப்பலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
5rb5k48g

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------