முகப்பு »  நலவாழ்வு »  ஃபோலிக் அமிலம் நிறைந்த 5 உணவுகள்!!

ஃபோலிக் அமிலம் நிறைந்த 5 உணவுகள்!!

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், மக்னீஷியம், சிங்க், பொட்டாஷியம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. 

ஃபோலிக் அமிலம் நிறைந்த 5 உணவுகள்!!

சிறப்பம்சங்கள்

  1. ஃபோலிக் அமிலம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  2. கீரை, ப்ரோக்கோலி, சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது.
  3. கூந்தல் உறுதியாக வளர புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் அத்தியாவசியம்.

கூந்தல் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்க கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.  கூந்தல் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது.  முடிக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் சரியாக கிடைக்காவிட்டால் கூந்தல் வலுவிழந்து உடைந்து போவதுடன், முடி உதிர்வும் ஏற்படும்.  ஆகவே, ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.  ஃபோட்லிக் அமிலம் மற்றும் ஃபோலேட் என்று சொல்லக்கூடிய வைட்டமின் பி சத்து தண்ணீரில் கரையக்கூடியது.  இது கூந்தல் மற்றும் நகம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வளர செய்யும்.  மேலும் உடலில் இரத்த சிவப்பு அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  ஃபோலிக் அமிலம் நிறைந்த சில உணவுகளை பார்ப்போம். 

முட்டை:

முட்டையில் புரதம் மட்டுமின்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.  உங்களுக்கு பிடித்தமான வகையில் முட்டையை தயாரித்து சாப்பிடலாம்.  முட்டை உங்களை நிறைவாக வைத்திருப்பதுடன் நாள் முழுக்க ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது. 


fovg49ro

பருப்புகள்:

பருப்பு வகைகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது.  இதில் ஃபோலிக் அமிலமும் இருக்கிறது.  மேலும் இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  பருப்புகளை கொண்டு சுவையான ரெசிபிகளை செய்யலாம். 

சிட்ரஸ் உணவுகள்:

சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.  ஆரஞ்சு, எலுமிச்சை, க்ரேப்ஃப்ரூட், கொய்யா ஆகியவற்றில் ஃபோலிக் அமிலமும் நிறைந்திருக்கிறது.  இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் உண்டாவது தடுக்கப்படும். 

கீரைகள்:

கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இருக்கிறது.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  ஃபோலிக் அமிலம் கீரையில் அதிகமாக இருப்பதாலே முடி வளர்ச்சியை அதிகரிக்க கீரை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

6ll7v8io

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், மக்னீஷியம், சிங்க், பொட்டாஷியம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.  மேலும் ப்ரோக்கோலியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------