முகப்பு »  நலவாழ்வு »  சரும ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை பயன்படுத்தலாம்!!

சரும ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை பயன்படுத்தலாம்!!

துளசியில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்கிறது.  தினமும் சில துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  

சரும ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை பயன்படுத்தலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. துளசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.
  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  3. சரும பாதிப்புகளை சரிசெய்வதில் துளசிக்கு முக்கிய பங்கு உண்டு.

பண்டைக்காலம் முதலே துளசி அதன் மருத்துவ பயன்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  தினமும் நீங்கள் குடிக்கும் தேநீரில் சில துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால் ருசியும் மணமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.  துளசி இலையில் வைட்டமின் ஏ, சி , கால்சியம், இரும்புச்சத்து, சிங்க் மற்றும் க்ளோரோஃபில் இருக்கிறது.  மேலும் இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை இருக்கிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.  

சருமம்: 
சரும பிரச்னைகளுக்கு துளசி சிறந்த தீர்வு.  இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் இருப்பதால், சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, பருக்கள் போன்ற சரும பிரச்னைகளை போக்கிவிடும்.  துளசி எண்ணெயை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.  
 


a1ccjqmo

மன அழுத்தம்: 
மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க துளசியை பயன்படுத்தலாம்.  மன அழுத்தத்தை குறைக்க துளசி தேநீர் குடிக்கலாம்.  இதில் கஃபைன் துளியும் இல்லாததால் தொடர்ச்சியாக குடித்து வரலாம்.  இதில் ஆண்டி-டிப்ரசண்ட் தன்மை இருப்பதால் மன அழுத்தத்தை குறைத்துவிடும்.  

இரத்த சர்க்கரை: 
நீரிழிவு நோயாளிகள் துளசியை அடிக்கடி உட்கொள்ளலாம்.  டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கும் தன்மை துளசிக்கு உண்டு.  அதிகபடியாக சுரக்கும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய அனைத்தையுமே கட்டுப்படுத்துகிறது.  

வீக்கம்: 
துளசியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் முட்டு வலி மற்றும் ஆர்த்திரிட்டிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.  துளசியில் தேநீர் தயாரித்து குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  
 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
feh0dshg

நோய் எதிர்ப்பு சக்தி: 
துளசியில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்கிறது.  தினமும் சில துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------