முகப்பு »  நலவாழ்வு »  கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்!!

கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்!!

இரண்டு கப் தண்ணீரில் 10-15 கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க வைத்து, அதனை கொண்டு கூந்தலை அலசினால் முடி உதிர்வு குறைந்து கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.   

கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. கூந்தலை அடர்த்தியாக வளர செய்யும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.
  2. தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டு வரலாம்.
  3. தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு கூந்தலுக்கு தடவி வரலாம்.

கூந்தல் வளர்ச்சியை கெடுக்கக்கூடிய மற்றும் பாதிக்கக்கூடிய காரணம் மற்றும் காரணிகள் ஏராளமாக உள்ளது.  வீட்டிலேயே இயற்கையான பொருட்கள் கொண்டு கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தக்கூடியதை செய்யலாம்.  கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது.  ஆரோக்கிய நன்மைகளை காட்டிலும், உணவில் சுவையை அதிகரிக்கவும் கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளலாம்.  கறிவேப்பிலையில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், நிகோடினிக் அமிலம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  கறிவேப்பிலையை கூந்தல் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.  

கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்: 
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.  தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை எடுத்து கொள்ளவும்.  தேங்காய் எண்ணெயை சூடுப்படுத்தி அதில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விடவும்.  கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுவதும் எண்ணெயில் இறங்கியதும், அதனை ஸ்கால்பில் நன்கு மசாஜ் செய்யவும்.  மயிர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து சில மணி நேரங்கள் கழித்து கூந்தலை அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  
 

 6sjqjqhg


கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் பெரிய நெல்லி: 
பெரிய நெல்லி மற்றும் வெந்தயம் இரண்டுமே கூந்தல் வளர்ச்சியை தூண்டக்கூடியது.  இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயம், 10-15 கறிவேப்பிலை இலைகள் மற்றும் இரண்டு மேஜைக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைத்து தலைக்கு தடவி அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடலாம்.   நீங்கள் தேவையான அளவு கறிவேப்பிலையை தயிருடன் சேர்த்து அரைத்து தலைக்கு மாஸ்க் போட்டு வரலாம்.  இதனால் கூந்தல் உதிர்வு குறையும்.  
 

pu8gf71g

கறிவேப்பிலை: 
இரண்டு கப் தண்ணீரில் 10-15 கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க வைத்து, அதனை கொண்டு கூந்தலை அலசினால் முடி உதிர்வு குறைந்து கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.   

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------