முகப்பு »  நலவாழ்வு »  சூடாக தேநீர் அருந்தினால் உணவுக் குழாய் புற்றுநோய் வருமா? ஆய்வு விடுக்கும் எச்சரிக்கை

சூடாக தேநீர் அருந்தினால் உணவுக் குழாய் புற்றுநோய் வருமா? ஆய்வு விடுக்கும் எச்சரிக்கை

இது ஆண்களை விட பெண்களையே பாதிக்கிறது. 2016 ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு 65 டிகிரி செல்சியஸ் சூடான பானம் புற்றுநோய் ஆபத்தை உருவாக்கக் கூடியது என்று எச்சரிக்கை செய்துள்ளது.

சூடாக தேநீர் அருந்தினால் உணவுக் குழாய் புற்றுநோய் வருமா? ஆய்வு விடுக்கும் எச்சரிக்கை

இந்த முடிவு சூடாக தேநீர் அருந்துபவர்களுக்கு மட்டுமல்ல , சூடாக காபி, ஹாட் சாக்லேட் அல்லது பிற சூடான பானங்களை குடித்தாலும் இந்த ஆபத்து உள்ளது.

உங்களுக்கு தேநீரை சூடாக அருந்துவதுதான் பிடிக்குமா? எச்சரிக்கை உணவுக் குழாய் புற்று நோய் உருவாகும்  அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு உணவுக்குழல் புற்றுநோய்க்கான ஆபத்து சூடான தேநீர் அருந்துவதால் உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. சூடான தேநீரை அருந்துவதற்கு முன் குறைந்த பட்சம் 4 நிமிடங்கள் ஆறவைத்து குடிக்க வேண்டும். 

நான்கு நிமிட இடைவெளி கூட கொடுக்காமல் கொதித்த தேநீரை சூடாகவே அருந்துவதால் தொண்டை மற்றும் உணவுக்குழாய் பாதிக்கப்படலாம். சூடான தேநீர், காபியை பலர் அனுபவித்துக் குடிப்பதை பார்க்கலாம். ஆனால், ஆய்வு அறிக்கையின்படி, மிகவும் சூடான தேநீர் குடிப்பதால் உணவுக் குழாய் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க முடியும். 

அமெரிக்கன் புற்றுநோய் சங்கத்தின் முன்னணி எழுத்தாளர் ஃபர்கத் இஸ்லாமி இதை தெரிவித்துள்ளார். புற்றுநோய் சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் 40 முதல் 75 வயதுடைய 50,045 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். உயர் வெப்பநிலையில் (60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல்) 700 மி.லி குடிப்பது 90% அதிகப்படியான உணவுக்குழாய் புற்றுநோயுடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 


இந்த முடிவு சூடாக தேநீர் அருந்துபவர்களுக்கு மட்டுமல்ல , சூடாக காபி, ஹாட் சாக்லேட் அல்லது பிற சூடான பானங்களை குடித்தாலும் இந்த ஆபத்து உள்ளது. உணவுக்குழாய் புற்றுநோய் இந்தியாவில் ஆறாவது மிகப் பொதுவான புற்றுநோயாகும். மேலும் உலகளவில் எட்டாவது இடத்தில் உள்ளது. 

இது ஆண்களை விட பெண்களையே பாதிக்கிறது. 2016 ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு 65 டிகிரி செல்சியஸ் சூடான பானம் புற்றுநோய் ஆபத்தை உருவாக்கக் கூடியது என்று எச்சரிக்கை செய்துள்ளது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com