முகப்பு »  நலவாழ்வு »  ஜங்க் புட் லவ்வரா நீங்க…? இந்த ஆபத்து உறுதி

ஜங்க் புட் லவ்வரா நீங்க…? இந்த ஆபத்து உறுதி

ஜங்க் புட் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உளவியல் கோளாறுகளையும் அதிகரிக்கிறது.

ஜங்க் புட் லவ்வரா நீங்க…? இந்த ஆபத்து உறுதி

அதிகளவு சர்க்கரை உள்ள உணவுகள் மனநலத்தை வெகுவாக பாதிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

மனச்சோர்வை உணர்கிறீர்களா? ஆரோக்கியமற்ற ஜங்க் புட்தான் உங்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறதென்றால் அதை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டிய தருணமிது. 

ஜங்க் புட்டினால் உளவியல் கோளாறுகள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஜங்க் புட் பைபோலர் டிஸ் ஆர்டர் என்ற உளவியல் கோளாறுக்கு வழிவகுக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது. ஜங்க் புட் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உளவியல் கோளாறுகளையும் அதிகரிக்கிறது. 

அதாவது மன அழுத்தம், பைபோலர் கோளாறுகளை அதிகரிக்கிறது. இந்த ஆய்வினை உணவு உலக அளவிலான உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.  “ஆரோக்கியமான உணவு தேர்வுகள் மன நலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. மனநல மருத்துவத்தில் உணவின் பங்களிப்பை கவனிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று ஆய்வாளார் ஜிம் இ பந்தா தெரிவிக்கிறார். 


 மனநலத்திற்காக போராடுபவர்கள் நிச்சயமாக உணவின் தரம் மற்றும் ஆரோக்கியமான டயட்டை ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் குழு 2005 மற்றும் 2015 வரை நடத்திய 2,40,000 தொலை பேசி தரவுகளை மதிப்பாய்வு செய்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------