முகப்பு »  நலவாழ்வு »  உங்கள் வேலை நேர ஷிப்ட்டிற்கு ஏற்ப பயோலாஜிக்கல் கிளாக்கை மாற்ற முடியுமா…? இதப் படிங்க

உங்கள் வேலை நேர ஷிப்ட்டிற்கு ஏற்ப பயோலாஜிக்கல் கிளாக்கை மாற்ற முடியுமா…? இதப் படிங்க

உடற்பயிற்சி பயோலாஜிக்கல் கிளாக்கில் மாற்றம் ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்ட முதல் ஆராய்ச்சி இதுதான்.

உங்கள் வேலை நேர ஷிப்ட்டிற்கு ஏற்ப  பயோலாஜிக்கல் கிளாக்கை மாற்ற முடியுமா…? இதப் படிங்க

உடற்பயிற்சி பயோலாஜிக்கல் கிளாக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும்

ஷிப்ட் அடிப்படையில்தான் உங்களின் வேலை நேரம் இருக்கிறதா? சில உடற்பயிற்சிகள் செய்யும் போது உடம்பின் பயோலாஜிக்கல் கிளாக்கை அதற்கேற்ப மாற்ற முடியும் என சமீபத்திய ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வு, உடற்பயிற்சி செய்யும் நாள் நேரத்தை பொறுத்து உடலின் பயோலாஜிக்கல் கிளாக்கை மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது. 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

காலை 7 மணிக்கு அல்லது மதியம் 1 முதல் 4 மணிக்கு உடற்பயிற்சி செய்யும் போது பயோலாஜிக்கல் கிளாக் முன்னதாகவே செயல்படத் தொடங்கிவிடும். இரவு 7 மணி முதல் 10 க்குள் உடற்பயிற்சி செய்யும் போது பயோலாஜிக்கல் கிளாக் தாமதமாகி விடுகிறது. உடற்பயிற்சியை காலை 1 முதல் 4 மணிக்குள்ளோ மற்றும் 10 மணிக்கு செய்யும் போது பயோலாஜிக்கல் கிளாக்கில் விளைவுகளை ஏற்படுத்தும். வேலை நேர ஷிப்பிட்டிங் ஏற்றவாறு உடற்பயிற்சி வயது மற்றும் பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல் விளைவுகளை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். 

உடற்பயிற்சி பயோலாஜிக்கல் கிளாக்கில் மாற்றம் ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்ட முதல் ஆராய்ச்சி இதுதான். உடற்பயிற்சி மூலமாகஜெட்லாக்கிலிருந்து விடுபட முடியும்  வேலைநேர மாற்றத்திற்கு ஏற்ப பயோலாஜிக்கில் கிளாக்கை மாற்றியமைக்க முடியும். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தி ஜெர்னல் ஆஃப் சைக்காலஜியில் வெளியிடப்பட்டது. ஜெட் லாக் மற்றும் வேலை நேரம் உடலின் பயோலாஜிக்கல் கிளாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் 101 பங்கேற்பாளர்களை ஐந்து நாள் உடற்பயிற்சி  செய்யவைத்து பரிசோதனை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பயோலாஜிக்கல் கிளாக்கை சோதனையில் ஈடுபட்ட பங்கேற்பாளர்களின் சிறுநீரக மாதிரியை சோதித்து பயோலாஜிக்கல் கிளாக் குறித்த முடிவுகளை எடுத்துள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------