முகப்பு »  நலவாழ்வு »  காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசம் பிரச்னைகளை தீர்க்கும் மூச்சு பயிற்சி…! எப்படி செய்ய வேண்டும் தெரியுமா…?

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசம் பிரச்னைகளை தீர்க்கும் மூச்சு பயிற்சி…! எப்படி செய்ய வேண்டும் தெரியுமா…?

ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கட்டாயம் செய்ய வேண்டிய பயிற்சிகளில் ஒன்று மூச்சுப் பயிற்சிதான்.

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசம் பிரச்னைகளை தீர்க்கும் மூச்சு பயிற்சி…! எப்படி செய்ய வேண்டும் தெரியுமா…?

காற்று மாசுபாட்டினால் ஆஸ்துமா, இருமல், சுவாசக் கோளாறு பிரச்னைகள் பலவும் ஏற்படுகிறது.

சிறப்பம்சங்கள்

  1. மூச்சுப் பயிற்சி நுரையீரலுக்கு முழுமையாக ஆக்ஸிஜனை வழங்குகிறது.
  2. மூச்சுப் பயிற்சி நுரையீரலை உள்புறமாக தூய்மை செய்கிறது.
  3. சுவாசக் கோளாறுகளுக்கு காற்று மாசுபாடு முக்கிய காரணமாகும்.

இன்றைய காலத்தில் மூச்சுப் பயிற்சிக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கிறோம். இந்த நிலைக்கு காற்று மாசுபாட்டிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காற்று மாசுபாட்டினால் ஆஸ்துமா, இருமல், சுவாசக் கோளாறு பிரச்னைகள் பலவும் ஏற்படுகிறது. மூச்சுப் பயிற்சியை முறையாக எடுத்துக் கொண்டால் காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்கலாம். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கட்டாயம் செய்ய வேண்டிய பயிற்சிகளில் ஒன்று மூச்சுப் பயிற்சிதான். வாழ்க்கை முறை நிபுணர் லுகே கொடின்ஹோ இதை அங்கீகரிப்பதுடன் சில மூச்சு பயிற்சிகளையும்  இண்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். 

மூச்சுப் பயிற்சியை  காலை உணவுக்குக் பின் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் கழித்து செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார். உடற்பயிற்சியைத் துவங்கும் முன் கால்களை அகலாகமாக்கி நிற்கவும் மூக்கின் வழியாக சுவாசத்தை ஆழமாக உள்ளிழுத்து வெளிவிடவும். 


okfn8ea

மெதுவாக மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து வாயின் வழியாக வெளியேற்றவும். காற்றை வெளியிடும் போது உங்களால் எவ்வளவு மெதுவாக வெளியிட முடியுமோ அப்படி வெளியிட வேண்டும். நுரையீரலில் உள்ள காற்று முழுவதையும் வெளியிட வேண்டும். 

காற்றை மூக்கின் வழியே உள்ளிழுத்து நுரையீரலில் 6 நொடி வைத்திருந்து பின் வாய் வழியே மெல்ல மெல்ல வெளியிட வேண்டும்.  சுத்தமான காற்று நுரையீரலில் நிரம்பி வாய்வழியே வெளியேறுவதால் சுவாசக் குழாயில் உள்ள தடைகள் யாவும் நீங்குகிறது. இந்த பயிற்சியினால் நுரையீரல் தூய்மையடைவதுடன் வயிற்றுக்கு நல்ல வலிமையைத் தருகிறது. மேலும் இது சருமத்திற்கு பொலிவையும் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பிரச்னைகளையும் தீர்க்கிறது. 

(Luke Coutinho, Holistic Lifestyle Coach - Integrative Medicine)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information,

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------