முகப்பு »  நலவாழ்வு »  கொரோனாவைரஸ்: முகமூடி அணியும்போது தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்!

கொரோனாவைரஸ்: முகமூடி அணியும்போது தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்!

கொரோனாவைரஸ்: முகமூடிகளை அணிவது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஒரு முக்கியமான வழியாகும்.

கொரோனாவைரஸ்: முகமூடி அணியும்போது தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்!

கொரோனா: முகமூடி உங்கள் மூக்குக்குக் கீழே இருக்கக்கூடாது.

சிறப்பம்சங்கள்

  1. நீங்கள் வீட்டில் ஒரு முகமூடி செய்யலாம்
  2. நீங்கள் முகமூடி தயாரிப்பதற்கு முன்பு துணி சுத்தமாக கழுவவேண்டும்
  3. முகமூடி உங்கள் தாடைக்கு கீழ் இருக்க வேண்டும்

கொரோனாவைரஸ்: முகமூடிகளை அணிவது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஒரு முக்கியமான வழியாகும். இருப்பினும், ஒரு முகமூடி உங்களுக்கு நன்றாகப் பொருந்தினால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும், சரியாகப் பொருந்தினால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதைத் தொட மாட்டீர்கள். இந்த கட்டுரையில், கொரோனா வைரஸ் தடுப்புக்காக முகமூடிகளை அணியும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பற்றிப் பேசப் போகிறோம். நீங்கள் கச்சிதமான முகமூடியை வீட்டிலே தயாரிக்கலாம். கோவிட்-19 தொற்றுநோயுடன் போராட முழு உலகமும் போராடி வரும் நேரத்தில், அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N-95 மாசு எதிர்ப்பு முகமூடிகள் சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த காரணத்திற்காகவே நீங்கள் வீட்டில் முகமூடிகளை உருவாக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, வீட்டில் தயாரிக்கும் முகமூடிகள்  தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிக்கச் சிறந்தது. நீங்கள் எந்தவொரு மருத்துவ நிலைமைகளாலும் பாதிக்கப்படாவிட்டாலும் அல்லது சுவாசக் கஷ்டங்கள் இல்லாவிட்டாலும், நீங்கள் வீட்டில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகளைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது சமூகத்தைப் பெருமளவில் பாதுகாக்க உதவும்.

வீட்டில் முகமூடிகள் தயாரிக்கப் பின்வரும் வீடியோவையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உங்களுக்குத் தேவையானது சுத்தமான துணி மட்டுமே. தையல் அல்லது முகத்தை மறைப்பதற்கு முன் துணியை நன்கு சுத்தம் செய்து கழுவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் முகமூடி தயாரிப்பது எப்படி என்பதை வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


கோவிட்-19 தடுப்புக்கு முகமூடிகளை அணியும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்:

உங்கள் முகமூடியின் மேல் விளிம்பு உங்கள் மூக்கின் பாலத்தில் இருக்க வேண்டும். WebMd-ன் இன்ஸ்டாகிராம் இடுகையில், முகமூடிக்கும் உங்கள் முகத்திற்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முகமூடியின் விளிம்பின் கீழே உங்கள் தாடைக்குக் கீழ் இருக்க வேண்டும்.

1. முகமூடி உங்கள் தாடையை உள்ளடக்கியது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. முகமூடி உங்கள் மூக்குக்குக் கீழே இருக்கக்கூடாது.

3. முகமூடி உங்கள் மூக்கின் நுனியை மட்டும் மறைக்கக்கூடாது.

4. முகமூடி மிகவும் தளர்வாக இருக்கக்கூடாது மற்றும் உங்கள் முகத்தில் சரியாகப் பொருந்த வேண்டும்.

5. முகமூடியை அடிக்கடித் தொடக் கூடாது.

6. அடிக்கடி கழற்றி மாட்டுவதைத் தவிர்க்கவும்.

d1jgspjg

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் பி. ரகு ராம், நீங்கள் முகமூடியைக் கழற்றிய பின் 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டியது அவசியம் என்றார்.

வீட்டில் இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்!

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------