முகப்பு »  நலவாழ்வு »  அலட்சியப்படுத்தக் கூடாத பொதுவான சிறுநீரகப் பிரச்னைகள்!

அலட்சியப்படுத்தக் கூடாத பொதுவான சிறுநீரகப் பிரச்னைகள்!

சரியான நேரத்தில் சரியான சிகிச்சையானது நிலைமையின் விளைவுகளை கட்டுப்படுத்த உதவும்.

அலட்சியப்படுத்தக் கூடாத பொதுவான சிறுநீரகப் பிரச்னைகள்!

பெண்கள் அதிகமாக UTI பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்

சிறப்பம்சங்கள்

  1. சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும்
  2. பெண்களுக்கு UTI பிரச்னை அதிகம் ஏற்படும்
  3. உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் நிலைமை மோசமாக வாய்ப்புகள் உள்ளது

சிறுநீரக பிரச்சினைகள் மிகவும் பொதுவாக ஏற்படும். இதனாலேயே என்னவோ பெரும்பாலும் அதை கண்டுகொள்வதில்லை. யூ.டி.ஐ என்பது சிறுநீரகத்துடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பிரச்சினை. இருப்பினும்,  ஆயுள் காலத்தைக் கருத்தில் கொண்டு, பல சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

சிறுநீரக பிரச்னைகள் மேற்கொண்டு தீவிரமடையாமல் இருப்பதற்கு  சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு தேவை.  சிலர் மருத்துவ உதவி பெற டெலிமெடிசின் தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் சிறுநீரக பிரச்சினைகளின் வகைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

அந்தவகையில்,  மருத்துவ உதவி தேவைப்படக் கூடிய சில பொதுவான சிறுநீரக பிரச்சினைகள் இங்கு காணலாம்.


1. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்:
இது கிட்டத்தட்ட அனைவரும் எதிர்கொள்ளக்கூடிய, அதே நேரத்தில் கண்டுகொள்ளாத சிறுநீரக பிரச்சினை. இருப்பினும், இதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் இதற்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், அது நிரந்தர சிறுநீரக பாதிப்பு ஏற்படுதவதற்கு வழிவகுக்கும். சிறுநீர் பாதையில் அடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆண்களும் பெண்களும் சுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்துவது மூலம் தொற்றுநோயைத் தவிர்க்கலாம்.  
.

orupd1

ஆண்களை விட பெண்களுக்கு UTI பிரச்னை அதிகம் ஏற்படுகிறது
Photo Credit: iStock

2. விறைப்புத்தன்மை:
இது ஆண்களில் வளர்ந்து வரும் பாலியல் பிரச்சினை. அதே போல், பல அடிப்படை சூழல் காரணமாகவும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை மருத்துவர்களுடன் விவாதிப்பதில் வெட்கப்படுகிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் சரியான மருத்துவ உதவி விறைப்புத்தன்மைக்கு தேவை. 

3. சிறுநீர் அடங்காமை:
இது வளர்ந்து வரும் வயதில் பெரும்பாலும் எழும் ஒரு பிரச்சினை. சிறுநீர்ப்பையில் கட்டுப்பாட்டை இழப்பதன் மூலம் சிறுநீர் அடங்காமை ஏற்படுகிறது. . நீரிழிவு நோய், சிறுநீர் பாதை நோய்த்தொற்று, முதுகெலும்பு காயம், மற்றும் பல போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினை உருவாக வாய்ப்புளக் உள்ளது. 

நிலைமை தீவிரமடையும் வரையில் பெரும்பாலான சிறுநீரக பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. சிறுநீரக பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சரியான நேரத்தில் சரியான சிகிச்சையானது நிலைமையின் விளைவுகளை கட்டுப்படுத்த உதவும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

(டாக்டர் அனுபம் பார்கவா, தலைவர், சிறுநீரகத் துறை, மேக்ஸ் ஹெல்த்கேர், மற்றும் சீக்மெட்டின் புரவலர்)

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------