முகப்பு »  நலவாழ்வு »  சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்யும் இயற்கை வழிகள்!!

சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்யும் இயற்கை வழிகள்!!

கீரையை அளவாக சாப்பிட வேண்டும்.  அதிகபடியாக உட்கொண்டால் சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது.  

சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்யும் இயற்கை வழிகள்!!

சிறப்பம்சங்கள்

  1. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சிறுநீர் வழியே நச்சுகள் வெளியேற்றப்படுகிறது.
  2. சிறுநீரக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்து விட வேண்டும்.
  3. சில உணவுகள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகம் பெரிதும் பயன்படுகிறது.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய நச்சுக்கள் எல்லாம் சிறுநீரகத்தில் தான் தேங்கும் என்பதால் நம் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.  சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி டீடாக்ஸ் செய்வதற்கு சில இயற்கை வழிமுறைகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.  

தேநீர்: 
நம்மில் பெரும்பாலானோர் தலைவலிக்கான தேநீர் குடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.  மூலிகை பொருட்கள் கொண்டு தேநீர் தயாரித்து குடிப்பதால் சிறுநீரகம் க்ளென்ஸ் செய்யப்படுகிறது.  மசாலா பொருட்கள் கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.  
 

9nkomcbo


 

செர்ரி மற்றும் க்ரான்பெர்ரி: 
இவை இரண்டிலுமே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது.  சிறுநீரக தாரை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.  இதனை கொண்டு ஸ்மூத்தி, சாலட் ஆகியவை செய்து சாப்பிடலாம்.  ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.  

பழச்சாறுகள்: 
பழச்சாறுகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  ஆனால் அதில் உப்பு அல்லது சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.  எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த பழச்சாறுகளை குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறும்.  தினமும் இந்த பழச்சாறுகளை குடித்து வர சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்கும். 
 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
aq9a3oa

 கீரைகள்: 
கீரைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், தாதுக்கள் ஆகியவை இருப்பதால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க இவற்றை சாப்பிடலாம்.  ஆனால் கீரையை அளவாக சாப்பிட வேண்டும்.  அதிகபடியாக உட்கொண்டால் சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------