முகப்பு »  நலவாழ்வு »  மழைக்கால உடல் பாதிப்புகளை விரட்டும் வேப்பம்

மழைக்கால உடல் பாதிப்புகளை விரட்டும் வேப்பம்

மழைக் காலத்தில் ஏற்பட கூடிய உடல் பாதிப்புகளுக்கு தேவையான வேப்ப மருத்துவத்தை பற்றி இங்கே

மழைக்கால உடல் பாதிப்புகளை விரட்டும் வேப்பம்

சிறப்பம்சங்கள்

  1. வேப்பிலையின் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி முகப்பரு போன்றவற்றை நீக்குகின்றது
  2. தலைமுடியில் ஏற்படும் பொடுகு பிரச்சனை நீங்க வேப்பம் பயன்படுகிறது
  3. உடல் பாதிப்புகளுக்கு ஏற்ற வேப்ப மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும்

'அதிசய மூலிகை' என அழைக்கப்படும் வேப்பம், இந்தியாவில் அதிக அளவில் கிடைக்க கூடிய மூலிகை ஆகும். எளிதாக கிடைக்க கூடிய வேப்பத்தின் பயன்கள் எண்ணில் அடங்காதவை. பல்வேறு உடல் பிரச்சனைகள் நீங்கவும், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் வேப்பம் பயன்படுகிறது. வெயில் காலம் முடிந்து பருவமழை காலம் தொடங்கும் நேரத்தில், உடல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, மழைக் காலத்தில் ஏற்பட கூடிய உடல் பாதிப்புகளுக்கு தேவையான வேப்ப மருத்துவத்தை பற்றி ஆயூர்வேத நிபுணர் மருத்துவர் ஹரிபிராசத் இங்கே பகிர்ந்துள்ளார்.

சருமத்திற்கு

அழகான பளிச்சிடும் சருமத்திற்கு வேப்பிலை பயனப்டுத்தலாம். மழைக்காலத்தில், சருமத்தில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளினால். சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மை அதிகமாகிறது. இதனால், முகப்பரு பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, முகப்பரு போன்ற பிரச்சனையை நீக்குகின்றது. மேலும், சரும எரிச்சல், அழற்சி, தொற்று நோய் போன்றவற்றையும் வேப்பிலை குணப்படுத்துகின்றது.


சிகை

தலைமுடியில் ஏற்படும் பொடுகு பிரச்சனை நீங்க வேப்பம் பயன்படுகிறது. பருவ காலம் மாறி வருவதனால், உச்சந்தலையில் உள்ள பிஎச் அளவுகள் வேறுபடும். வேப்பத்தின் குணநலன்களால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும், முடி கொட்டும் பிரச்சனைகள் நீங்கும்.

இரத்த சுத்திகரிப்பு

பருவ காலம் மாறி வரும் போது, உணவு பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆரோகியமான உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால், நச்சுத் தன்மைகள் உடலில் அதிக அளவு இடம் பெறும் வாய்ப்புகள் உண்டு. ஆண்டி ஆக்சிடன்ஸ் தன்மை வேப்பிலையில் அதிகம் உள்ளதால், இரத்த சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான நுரையீரல், சிறுநீரகத்தை காத்து கொள்கிறது. உடலில் சீரான இரத்த ஓட்டம் இருந்தாலே, நோய்கள் தாக்குவதில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

குடல் ஆரோக்கியம்

சீரான செரிமானம் ஏற்பட்டால், உடல் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். அஜீரண பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேப்பம் பயன்படுகிறது. குடல் தொற்று நோய்கள், குமட்டல், போன்ற பிரச்சனைகளை நீக்க வேப்பம் பயன்படுத்தலாம்.

பல்வேறு பிரச்சனைகளை நீக்க வேப்பம் பயன்படுகிறது. உடல் பாதிப்புகளுக்கு ஏற்ற வேப்ப மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------